Adirai pirai
posts

மோடியை தோற்கடிக்க 'பொது வேட்பாளர்' : கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக அனைவரும் வாபஸ்!

வாரனாசியில், நரேந்திர மோடிக்கு எதிராக,
பலமான ஒரு பொது வேட்பாளரை நிறுத்த
மதசார்பற்ற தலைவர்கள் அனைவரும், ஒத்தக்
கருத்துடன் முயற்சித்து வருகின்றனர்.
முன்னதாக, ‘கவ்மி ஏக்தா தள்’ (QED) சார்பாக
முக்தார் அன்சாரி நிறுத்தப்படுவதை அறிந்த
முலாயம் சிங், தனது வேட்பாளரை வாபஸ்
பெற்றுக் கொண்டு, முக்தார்
அன்சாரியை ஆதரிப்பதாகக் கூறினார்.
தற்போது, மோடியை தோற்கடிக்க எந்த
தியாகத்தையும் செய்யத்தயார் என,
‘கவ்மி ஏக்தா தள்’ கட்சியின் தலைவர் அத்ஹர்
ஜமால் கூறியுள்ளார்.
மோடியை தோற்கடிக்க ‘ஆம்
ஆத்மி கட்சி’யின் அர்விந்த் கேஜ்ரிவால் தான்
பலமான வேட்பாளர் என்றால்,
அவருக்கு ஆதரவாக அன்சாரியை தாங்கள்
வாபஸ் வாங்கவும் தயார், என்கிறார், அத்ஹர்
ஜமால்.
மோடிக்கு எதிராக பொது வேட்பாளராக
கேஜ்ரிவால் நிறுத்தப்பட்டால்,
மோடிக்கு தோல்வி உறுதி என, கடும்
அச்சத்தில் உள்ளனர், பாஜகவினர்.