பாண்டிச்சேரி கிரிக்கெட் அணியினர் அதிரைக்கு வருகை !!!!! [புகைப்படம் இணைப்பு]

அதிரையில் இன்று  காலை மேலதெரு பெரிய கருத்தம்மா மைதானத்தில்  WCC சார்பாக கிரிக்கெட் போட்டி நடந்தது. இப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அணியினர் மூன்று  

     1.AFCC அதிரை 
     2.WCC அதிரை
     3. PCC பாண்டிசேரி இவ்வாட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட ஓவர் 20. இதில் ஒவ்வொரு அணியினரும் தலா இரண்டு ஆட்டங்கள் விளையாட உள்ளனர். முதல் ஆட்டமான இன்று பாண்டிச்சேரி கிரிக்கெட் அணியினரும் WCC அதிரை அணியினரும் விளையாடினர். இதில் முதல் பேட்டிங் பிடித்த பாண்டிச்சேரி அணி 144 ரன்களை குவித்தது. பின்னர் களமிறங்கிய அதிரை WCC அணியினர் 18 ஓவர்களில் 145 ரன் எடுத்து வெற்றி பெற்றது. 

இன்று மதியம் PCC பாண்டிச்சேரி அணியினரும், அதிரை AFCC அணியினரும் விளையாடியதில் முதல் பேட்டிங் பிடித்த  பாண்டிச்சேரி அணி 20 ஓவருக்கு 133 ரன் எடுத்தனர். பிறகு இரண்டாவதாக பேட்டிங் செய்த அதிரை AFCC 134 ரன் எடுத்து வெற்றி பெற்றனர்.

Close