Adirai pirai
posts

சவூதியில் புதிய சட்டம் அமல்..! பலருக்கு வேலை பறிபோகும் அபாயம்!

சவூதி அரசாங்க‌ம் தற்பொழுது புதிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. அஃதாவது அந்த நாட்டில் உள்ள சில்லரை விற்ப்பனை கடைகளை (RETAIL STORES) இனி இரவு 9:00 மணிக்கு மேல் திறந்து வைத்திருக்கக் கூடாதாம். மேலும் அங்கு உள்ள உணவகங்க‌ள், மருந்தகங்க‌ள் ஆகியவற்றை 24 மணி நேரமும் திறந்து வைத்திருக்கலாம் எனவும் கூறியுள்ளது.

இந்த சட்டத்தால் சில்லரை விற்ப்பனை கடைகளை நடத்துவோர் மத்தியில் கவலையை ஏற்ப்படுத்தியுள்ளது. மேலும் அந்நாட்டின் பொருளாதாரத்தில் சில்லரை விற்ப்பனை கடைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த சட்டம் அமலுக்கு வந்தால் நாடின் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கும் என அந்நாட்டு பொருளாதார நிபுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சவூதி அரேபிய அரசாங்கம் கூறுகையில் நாட்டின் இரவு நேர பாதுகாப்பு கருதியே இந்த அறிமுகப்படுத்தபட உள்ளது என்கின்றனர்.

மேலும் நமதூரை சார்ந்த பலர் இது போன்ற கடைகளில் இரவு நேர வேலை (NIGHT SHIFT) வேலை செய்து வருகின்றனர். இந்த புதிய சட்டத்தால் இவர்களில் பலருக்கு வேலை பறிபோகும் அபாயம் உள்ளது.

தகவல்: ஹாஜா முகைதின் (ரியாத்)