ஜில் ஜில் ஜிகர்தண்டா (செய்முறை முறை)

1. கடல் பாசி – சிறிது

2. சர்க்கரை – தேவைக்கு

3. பால் – 3 கப்

4. ரோஸ் அல்லது நன்னாரி சிரப் – 1 மேஜைக்கரண்டி

5. ஃப்ரெஷ் க்ரீம் – 1 மேஜைக்கரண்டி [விரும்பினால்]

6. ஐஸ்க்ரீம் – 1 ஸ்கூப்

    கடல் பாசியை வழக்கம் போல் தயார் செய்து செட் ஆகும்போது கிளறி விடவும். அப்படி செய்து ஃப்ரிஜில் வைத்தால் தூள் தூளாக வரும், நறுக்கும் வேலை இருக்காது. இதை ஃப்ரிஜில் வைக்கவும்.

    பாலை நன்றாக காய்சவும். 2 கப் பால் 1 கப் ஆக வேண்டும்.

    இந்த பாலில் சர்க்கரை சேர்த்து கரைந்ததும் ஃப்ரிஜில் சில மணி நேரம் வைக்கவும்.

    ஒரு கப்பில் கடல் பாசி 1 மேஜைக்கரண்டி போடவும்.

    அதன் மேல் ரோஸ் (அ) நன்னாரி சிரப் ஊற்றவும்.

    மேலே ஃப்ரெஷ் க்ரீம் சேர்க்கவும்.

    இதில் குளிர்ந்த பால் ஊற்றி, மேலே ஒரு ஸ்கூப் ஐஸ்க்ரீம் போட்டு கொடுக்கவும்.
    கடல் பாசியில் ரோஸ் சிரப் சேர்த்து செய்தும் சேர்க்கலாம். விரும்பினால் ஜவ்வரிசியை ஊற வைத்து பாலில் வேக வைத்து சேர்க்கலாம். முந்திரி பாதாம் போன்றவை பொடியாக நறுக்கி சேர்க்கலாம். இன்னும் சுவை கூடும்.
    Close