அதிரை 3 ஸ்டார் ஜிம் பட்டுக்கோட்டையில் நடந்த ஆணழகன் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றது..!

பட்டுக்கோட்டையில் நடந்த ஆணழகன் போட்டியில் சென்னை வாலிபர் சாம்பியன் பட்டம் வென்றார்.
பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக முதல்வரின் பிறந்த நாளையொட்டி ஆணழகன் போட்டி 2 நாட்கள் நடந்தது.

ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெரியார் ஜிம்மும், இரண்டாவது இடத்தை
அதிராம்பட்டினம் 3 ஸ்டார் ஜிம்மும், மூன்றாவது இடத்தை பிஎஸ்எஸ் ஜிம்மும்
பெற்றது.

இரண்டாவது நாள் மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடந்தது. இதில்
ரயில்வேயில் பணிபுரியும் சென்னையை சேர்ந்த கார்த்தி ஆணழகன் பட்டம்
வென்றார். இரண்டாமிடத்தை சென்னையை சேர்ந்த கே.கார்த்தி பிடித்தார். முதல்
10 இடங்களில் வந்த வீரர்களுக்கு சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது. 

Close