சவூதியின் தலைநகர் ரியாத்தில் தொடரும் வழிப்பறிகள்!

சவூதி   தலைநகர்  
ரியாத்தில்   அதிகமாக   இந்தியர்களும் வாழும் பத்தா அருகில் உள்ள சாரா
ரயில்   நிலையம்   அருகே   எனது   உறவினர்களை   அடிக்கடி பார்க்க செல்வேன்.
 அங்கு அதிகமாக வழிப்பறிகள் நடப்பதாக எனது உறவினர்களும் நண்பர்களும்
சொல்லி உள்ளார்கள்.

கடந்த   இரு வாரங்களுக்கு முன்பு எனது
உறவினரும் அவர்களது நண்பர்களும் வீட்டின் கீழே   உள்ள   சிறிய   பஜாரில்
பேசி கொண்டு உள்ளனர்.   அங்கே   வந்த 10 பேர் கொண்ட கும்பல் கையில் இருந்த
கத்தியை கழுத்தில் வைத்து அவர்களிடம் இருந்த 4000 ரியால் பணத்தையும்
மற்றும் செல்போன்களை எடுத்துக்கொண்டு சர்வ சாதரணமாக சென்றனர்.
சுற்றி உள்ள ஒருவர் கூட இதை கேட்க
முடியவில்லை. காரணம் அனைவரும் பிழைப்பு தேடி வந்தவர்கள். அவர்களை நம்பி
குடும்பமும் உள்ளது.  சிலர் குடும்பத்துடனும் இருகின்றனர்.    பிறகு
 பிரச்சினை   வருமோ என்று அஞ்சுகின்றனர்.
நேற்று நான் காரில் சென்று கொண்டு
இருக்கும்போது ஒரு வட இந்தியரிடம் பர்ஸை பிடுங்கி சென்று கொண்டு இருந்தனர்.
அவர் எதுவும் பேச முடியாமல் அங்கேயே அழுது கொண்டு நின்று இருந்தார்.  இதை
எல்லாம் விட தர மறுத்த பலர் இறந்த சம்பவம் ஏராளமாக உண்டு.
இதை தவிர தமாம்மில் நேஸ்டொ அருகில் லேப்டாப் தர மறுத்த ஒரு கேரளா வாலிபரை
கொன்ற சம்பவங்கள் கூட கேட்டு இருக்கின்றேன். ஒரு வேளை நம்மிடம் காசு இல்லை
என்றால் அடித்து கை காலை உடைப்பதும் உண்டாம்…
இங்கு தினசரி பல கொடூரமான கதைகளை யாரை
சந்தித்தாலும் சொல்கின்றனர். இதில் என்ன ஒரு கஷ்டமான விஷயம் என்றால் அந்த
கும்பல் இன்னமும் அங்கே சாதரணமாக அவர்கள் நின்று கொண்டு தான் இருகின்றனர்.
இதற்கு முடிவு தான் என்ன..??
மனிதன் பல கஷ்டங்களை அனுபவித்து கொண்டு இருக்கும் இந்த கால கட்டத்தில் இப்படியும் செயல்கள் நடந்தால் என்ன தான் செய்வது.
இதை பார்க்கும் யாராவது சவூதி அரசாங்கம் காதில் போட
முடியுமா…வெளிநாட்டிற்கு வந்தும் கஷ்டம் தீரவில்லை என்றால் இந்த உலகத்தில்
எங்கேதான் செல்வது…???
இந்த ஆட்சியாளர்கள் கைவிட்டால் என்ன.. உலகத்தை ஆட்சி செய்பவனிடம் எவனும் தப்ப முடியாது…
– முஹம்மது சுல்தான்…
Close