நம் தொகுதி தி.மு.க வேட்பாளராக டி.ஆர். பாலு அறிவிப்பு..!

பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்
பெயரை கட்சியின் தலைவர் மு.க. கருணாநிதி வெளியிட்டுள்ளார். சென்னை
அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தி.மு.க. தலைவர் மு.
கருணாநிதி வேட்பாளர்கள் பெயரை அறிவித்துள்ளார். முன்னதாக வேட்பாளர்களுக்கு
வெற்றியை தேடித்தருமாறு வேண்டுகொள் விடுத்தார். மேலும், வேட்பாளர் பட்டியல்
முழுமையானது என்று சொல்லமாட்டேன்,  திருத்தம் வரலாம் என்று கருணாநிதி
கூறியுள்ளார்.
வேட்பாளர்கள் விபரம்: 
தென் சென்னை –  டி.கே.எஸ். இளங்கோவன்
வடசென்னை  – கிரிராஜா
மத்திய சென்னை – தயாநிதிமாறன்

தஞ்சாவூர் –  டி.ஆர். பாலு
ஸ்ரீபெரும்புதூர் – ஜெகத்ரட்சகன்
கள்ளக்குறிச்சி – மணிமாறன்
சேலம் – உமாராணி
நாமக்கல் – காந்தி செல்வன்
திருப்பூர் – செந்தில் நாதன்
நீலகிரி – ஆ. ராசா
கோவை – பழனிகுமார்
தருமபுரி – தாமரைச் செல்வன்
திருவண்ணாமலை – சி.என். அண்ணாத்துரை
ஆரணி – ஆர். சிவானந்தம்
விழுப்புரம் – முத்தையன்
பொள்ளாச்சி – பொங்கலூர் பழனிச்சாமி
திருச்சி – அன்பழகன்
கரூர் – சின்னச்சாமி
கடலூர் – நந்தகோபால்

Close