Adirai pirai
posts

அதிரையில் நாளை வாக்காளர் பெயர் சேர்த்தல் சரிபார்த்தல் முகாம்..!

பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் வரும் 9ம் தேதி நடக்கிறது.  ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1ம் தேதி 18 வயது பூர்த்தியானவர்களை அடிப்படையாக கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்து வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் வாக்குச்சாவடி மையங்களில் முகாம்கள் நடத்தி பெயர் சேர்த்தல் பணி நடக்கிறது. 
இந்த தேர்தலில் தகுதியான வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக, அவர்களுடைய பெயர்கள் விடுபட்டிருந்தாலோ அல்லது இதுவரை சேர்க்கப்படாமல் இருந்தாலோ அதற்கான ஒரு சிறப்பு முகாமை நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

அதன்படி வரும் 9ம் தேதி அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது. இந்த முகாமில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், இடமாற்றம் செய்தல் நடக்கிறது என்றார்.