Adirai pirai
posts

இனி அலைய வேண்டியதில்லை – பாஸ்போர்ட்

இனி பாஸ்போர்டிற்காக அலைய வேண்டியதில்லை விரைவில் நாடு
முழுவதும் கிராமங்களிலேயே கடவுசீட்டு (பாஸ் போர்ட் ) எடுக்கலாம். பாஸ்போர்ட் மண்டல
அலுவலத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதற்கான வசதியை கிராமங்களில்
அறிமுகப்டுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் ஒரு லட்சம் கிராமங்களில், சேவை மையங்கள் மூலம்,  கடவுசீட்டு
(பாஸ்போர்ட்) சேவையை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது,


இந்த பாஸ்போர்ட் சேவையை வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும்
இ-கவர்னன்ஸ் சேவை நிறுவனம் துவங்க உள்ளன முதற்கட்டமாக உத்தரபிரதேசம்., ஜார்கண்ட் மாநிலங்களில் 15 கிராமங்கள்
தேர்வு செய்யப்பட்டு சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது. பின்னர் நாடு முழுவதும்
அமல்படுத்தப்படுகிறது.