ஹாஷிம் அம்லாவை போல் முழு தாடியுடன் புதிய கிரிக்கெட் வீரர்..!

மாஷா அல்லாஹ்.. சத்தமில்லாமல் முழு தாடியுடன் இன்னுமொரு புதுவரவு!!

முழு தாடியுடன் இன்னுமொரு புதுவரவு!!

படத்தை பார்த்ததும் ஹஷீம் அம்லா என்று ஏமாந்து விடாதீர்கள்!

இவர் மொயின் அலி (Moeen Ali)

இங்கிலாந்து கிரிக்கற் அணியின் புதிய சகல துறை விளையாட்டு வீரர்! நேற்றைய

  தினம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் தனது அறிமுகத்தை மேற்கொண்டிருந்தார்

இந்த போட்டியில் இங்கிலாந்து 15 ஓட்டங்களால் தோல்வி அடைந்திருந்தாலும் அலி தனது முதல் போட்டியில் ஒரு விக்கற் மற்றும் 44 ஓட்டங்களை எடுத்து அசத்தியிருக்கிறார்!

ஹஷீம் அம்லாவிற்காக தென்னாபிரிக்க அணியை விரும்புபவர்கள் தற்போது மொயின் அலிக்காக இங்கிலாந்து அணியையும் விரும்புவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை! (நானும் தான் )

முழு தாடி, அழகிய நடத்தை, அபாரத்திறமை இவற்றால் முழு உலகையும் தன் பக்கம் ஈர்த்து இஸ்லாம் தொடர்பான அழகிய தகவலை அடுத்த மதத்தவர்களுக்கும் வழங்கிக் கொண்டிருக்கும் ஹஷீம் அமலாவிற்கு துணையாக இவரும் இருக்க வேண்டும் என்பதுதான் எமது அவா!

26 வயதாகும் அலி இன்னும் இன்னும் தனது திறமைகளை வெளிக்கொணர்ந்து தனக்கென தனியிடத்தை இங்கிலாந்து அணியில் பிடிக்க வேண்டும்! இன் ஷா அல்லாஹ்!

அதற்காக அல்லாஹ் தா ஆலா துணை புரிய வேண்டும்!

Close