அதிரையில் உடல் நலக் குறைவால் தவிக்கும் முதியவருக்கு உதவிடுங்கள் (வீடியோ)

அதிரையை சேர்ந்த அபூபக்கர் அவர்கள் நமதூர் அரசு மருத்துவமனையில் கடந்த 15 ஆண்டுகளாக உடல் நலக் குறைவால் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்.  

இவருடைய தந்தை பெயர் முகம்மது கோயா, அவர்கள் அதிரையில் புகழ்பெற்ற நாட்டு மருத்துவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அபூபக்கர் அவர்களுடைய மகன் தான் மருத்துவமனையிலேயே தங்கி உதவிசெய்து வருகிறார்.

இவருடைய இளமை காலத்தில் இவர் நமதூர் ஊர் காவல் படையில் பணிபுரிந்து பல சேவைகள் ஆற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரின் மருத்துவ தேவைக்கு ஏழ்மையான சூழலில் எந்த ஒரு சிகிச்சையும் செய்ய முடியாத நிலையில் தவித்து வருகின்றனர்.

இது குறித்து அவர் மக்களிடம் உதவி கோரி அதிரை பிறைக்கு அளித்த பேட்டி..

இந்த வீடியோ பார்த்தவர்கள் இவருடைய இயலாமையை கருத்தில் கொண்டு உதவி புரியுமாறு மக்களிடமும் சமுக இயக்கங்களிடமும் அதிரைபிறி.இன் சார்பாக  கேட்டுக்கொள்கிறொம்.

தொடர்புக்கு..


ஹாஜி. A. அப்துல் முனாப் (LAWYER) – 9842411490


M.R. ஜமால் முஹம்மது – 9894500545

Close