அடுத்த கவுன்சிலரை நாங்கள் நியமிப்போம், அதிரை 1ஆம் வார்டு மக்கள்..!

அதிரை 1ஆம் வார்டு பகுதியில் மொத்தம் ஆறு தெருக்கள் உள்ளன. இந்த பகுதிகளில் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் நம் அதிரை பிறை இணையதளத்தை அனுகி புகார் அளித்தனர்.

உண்மை நிலையை கண்டறிய அப்பகுதிக்கு விரைந்த நம் செய்தி குழுவினர் அப்பகுதியில் பூர்த்தி செய்யப்படாமல் உள்ள அடிப்படை பிரச்சனைகளை ஆராய்ந்து அப்பகுதி மக்களிடம் பேட்டி கண்டோம்.

இதில் அவர்கள் இந்த ஒன்றாம் வார்டில் அடிப்படை மற்றும் சுகாதார சீர்கேடு பிரச்சனைகள் சரி வர இன்னும் நிவர்த்தி செய்யப்படாமல் உள்ளதாக அவர்கள் கூறினர். மேலும் அடுத்த பேரூராட்சி தேர்தலில் மக்களாக ஒரு வேட்பாளரை நிறுத்தி வேற்றிபெற செய்வோம் என்றும் கூறியுள்ளனர்.

Close