12 th பொது தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது ! எப்படி ?

12 ஆம் வகுப்புக்கான  பொது தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டது .இன்றைய சமூக சூழல் ஒரு மாணவனின் அறிவாற்றலை அவன் பெறும் மதிப்பெண்களை கொண்டு தீர்மானிக்கிறது, ஒவ்வொரு மதிப்பெண்ணும் ஒரு மாணவனின் ஒட்டு மொத்த வாழ்க்கை சூழலையும் இல்லை என்றால் குறைந்த பட்சம் பல ஆண்டுகளுக்காவது  தீர்மானிக்க கூடியதாக உள்ளது.
 
பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் எடுக்கும் மதிப்பெண் அந்த மாணவன் தன் கல்விக்காக வருங்காலங்களில் செலவிடப்போகும் பணத்தை, அவன் தந்தையோ, தாயோ படப்போகும் சிரமத்தை  தீர்மானிக்கிறது. இச்சூழ் நிலையில் மாணவர்கள் கல்வியின் ஆற்றலை உணரவேன்டும், மதிப்பெண்ணின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதிக மதிப்பெண்களை எடுக்க முயற்சிக்க  வேண்டும்
 
படிப்புக்கும் நமக்கும் தூரம் அதிகம்
பெரும்பாலானமாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் இல்லை. அதற்கு காரணம் என்ன? ஒருவிஷயத்தில் ஆர்வம் இல்லாததற்கு காரணம் அதனுடைய விளைவுகள் தெரியாது தான்.படித்தால் என்ன நடந்துவிடப் போகிறது என்று சிலர் நினைக்கிறார்கள்படிப்பினால் உயர்வு பெற்ற பலரை அவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை. நிச்சயமாகஒவ்வொருவர் வீட்டிலும் அல்லது வீட்டுக்கு அருகிலும் படிப்பால் தங்கள் வாழ்க்கை நிலையை உயர்த்தி கொண்டவர்கள் பலர் இருப்பார்கள். அவர்களை எண்ணிப் பார்க்க வேண்டும். 
எந்த ஒன்றையும் விரும்பி செய்தால்அதில் வெற்றி பெற முடிகிறது. பல பேர்
சினிமா பாடல்களை முழுவதுமாகமனப்பாடமாக பாடுவதற்காக காரணம் கூட அதை அவர்கள்
அதிகம் விரும்புவது தான் .தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் சினிமாவை
விரும்பும்  மாணவர்கள் இனிமேல் படிப்பையும் விரும்ப ஆரம்பிப்பார்கள்.
எப்படி ?? 
இரத்தம் வருது ஆனால் வலிக்கலை..
 ஒரு சைக்கிள் ஓட்ட கற்றுக் கொள்ளும்மாணவன் எத்தனை தடவை விழுந்தாலும்,
காயம் ஏற்பட்டாலும், இரத்தம் வந்தாலும்வலிக்கவே இல்ல என்று சொல்லி விடாமல்
முயற்சித்து ஓட்ட கற்றுக் கொள்வதற்குகாரணம் அதில் உள்ள அதிகப்படியான
ஆர்வம்.
 நீச்சல் கற்று கொள்ளும் மாணவன் , அதனால் ஏற்படும் உடல் வலியையோ,
மூச்சுத்திணறலையோ பெரிது படுத்தாமல்தொடர்ந்து முயற்சித்து நீச்சல் கற்று
கொள்வதற்கு காரணம் அதில் உள்ள அதிகப்படியான
ஆர்வம்.  அந்த ஆர்வம் ஏன் படிப்பில் இல்லை. நல்ல விஷயங்கள் எப்போதுமே உடனடியாக மனிதர்களுக்கு பிடிக்காது. அது மனித இயல்பு. 
சிலபேருக்கு பாகற்காய் பிடிக்காது, அதை கண்டாலே பத்து அடி ஓடுவார்கள்
ஆனால் ஒரு டாக்டர் சொல்லுவார் ” உங்க உடம்பு பிரச்சினை தீரனும்ன பாகற்காய்
மட்டும் தான் சாப்பிடனும்இல்லைனா உங்களுக்கு நாம காரண்டி இல்ல ”  இதன்
பிறகு முதலில் வெறுப்போடுபாகற்காயை சாப்பிட தொடங்குவார் அதன் பின்
பாகற்காய் ரொம்ப அவருக்குபிடிச்சு போயிடும்..  அது இல்லாமல் உணவே இறங்காது
அது போல் தான் படிப்பும்ஆனால் அது இவ்வளவு கசப்புடையதல்ல . 
பாகற்காய் போல் படிப்பு கசப்பதும் தேன் போல் இனிப்பதும் உங்கள் மனதில் தான் உள்ளது.. 
படிப்பு எப்படி இனிக்கும் …?
கணக்கு பாடத்த யாருயா கண்டு புடிச்சது
நம் மாணவர்கள் செய்யும் பெரும் தவறு , ஒரு பாடம் வரவில்லை
என்றால் அதைஒட்டு மொத்தமாக தூக்கி எறிந்து விடுகின்றனர். அந்த புத்தகத்தையே
தீண்டுவதுகிடையாது.இவ்வாறு இருப்பது சரியா? படிப்பு என்பது முதலில்
பிடிக்காவிட்டாலும் போக போக பிடிக்க ஆரம்பிக்கும் . உதாரணதுக்கு கணக்கு பல
பேருக்குபிடிக்காத ஒரு பாடம் யாருய இத கண்டு புடிச்சது , இதற்கு காரணம்,
எனக்குவராது என்று உங்கள் மனதில் நீங்கள் போட்டுக்கொள்ளும் தவறான  விதை
கொஞ்சம்கொஞ்சமாக வளர்ந்து ஒட்டு மொத்த மனதையும் ஆக்கிரமித்து விடுகிறது.. 
இவரால் முடிந்தது உங்களாலும் முடியும்
எந்த மனிதனும் தோற்கவிரும்பமாட்டான்.அதனால் தான் எந்த படிப்பு சிரமமோ அதை
வெறுக்கிறான்.காரணம்தோற்று விடுவோம் என்ற பயம் அதன் பிறகு மற்றவர்கள் என்ன
சொல்வார்கள்என்ற வெட்கம். இந்த பயமும், வெட்கமும் தான் உங்களின் முதல்
எதிரி , நம்மால்முடியாது என்று நினைத்துவிட்டால் ஒரு குழந்தை எழுந்து கூட
நிற்கமுயற்சிக்காது, மற்றவர்கள் சிரிப்பார்கள் என்று நினைத்தால் எத்தனை
தடவைவிழுந்தாலும் நடக்க முயற்சிக்கிறதே அவ்வாறு முயற்சிக்காது , அல்லாஹ்
எல்லாகுழந்தைகளிடமும் இயற்கையாவே தந்துள்ள விட முயற்சி எனும் இப்பண்பை நாம்
தான்தொலைத்து விட்டோம்.
ஒருமுறை படித்தால் புரியாத பாடம் பல முறை முயற்சித்தால் புரிந்தே
தீரும்.எழுதிப்பாருங்கள் , நன்றாக படிக்கும் நண்பர்களிடம் கேளுங்கள் ,
ஆசிரியர்களிடம் உதவி தேடுங்கள். TNTJ மாணவர்  அணியை கூட நீங்கள்
தொடர்புகொள்ளுங்கள்.9 ஆம் வகுப்பில் பெயில் ஆகி படித்த மாணவன் 10 ஆம்
வகுப்பில் 93% மதிப்பெண் எடுத்தார். இது உண்மை. காரணம் ஒன்று என்னால்
முடியும் என்ற தன்னம்பிக்கை, விடாமுயற்சி , கடின உழைப்பு. 
 
எப்படி படிப்பது?
 
மனப்பாடம் செய்யும் பழக்கம் மாணவர்களைநல்ல திறமையுள்ள மனிதர்களாக
உருவாக்காது. புரிந்து கொண்டு படித்தால் நீண்டநாள் உங்கள் மனதில்
நிற்கும். எனவே முடிந்த வரையில் புரிந்து கொண்டுபடிக்க
முயற்சியுங்கள்.  நன்கு படிக்கும் மாணவர்களோடு நட்பை
ஏற்படுத்திக்கொள்ளுங்கள். பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும். படிப்பவை மனதில்
நிற்க உடனடியாக எழுதிப் பாருங்கள் .எழுதும் போது உங்களுடய
தவறுகள்புலப்படும்.மறக்காது. கணக்கு எனக்கு வராது என்று சொல்வதை முதலில்
நிறுத்துங்கள். கணக்கை  போன்று எளிதான பாடம் கிடையது. உண்மையிலேயே
அதிகமதிப்பெண் பெற எளிய பாடம் கணக்கு .தொடர்ந்து செய்யும் பயிற்சி தான் அதை
எளிதாக்குகிறது. 9 ஆவதில்  தோல்விஅடைந்த ஒருவரைப் பற்றி சொன்னது
நினைவிருக்கும். அவர் பெற்ற மொத்த மதிப்பெண்5 பாடமும் சேர்த்து 75
மதிப்பெண் (15 %). ஆனால் அவர் பொதுத்தேர்வில் கணக்கு
பாடத்தில் 99% மதிப்பெண் எடுத்தார்.இது கதையல்ல நிஜம்.
 
கணக்கு  
 
கணக்கில் உள்ள ஃபார்முலாக்களை எழுதிவைத்து மனப்பாடம்
செய்யுங்கள்.அதற்கென்று தனி நோட்டு போடுங்கள். கணக்குகளைஎழுதி எழுதி
பயிற்சி செய்யுங்கள் முதலில் தவறானாலும் தொடர்ந்து முயற்சியுங்கள்.  இது
நம் வாழ்க்கையை தீர்மானிக்க போகும் ஒரு களம் என்பதை மனதில் வைத்து 
தொடர்ந்து முயற்சிக்கும் போது பதில் வந்தே தீரும்
அசிரியர்களின் மற்றும் நன்றாகபடிக்கும் மாணவர்களின் உதவியை எடுத்துக்
கொள்ளுங்கள். ஒரு குழுவாக அமர்ந்து பயிற்சி செய்து பாருங்கள் ஒருவர்
சோர்ந்து போகும்போது மற்றவர் தேற்றவேண்டும்.இவ்வாறு முயற்சித்தவர்கள் பல
பேர் வென்றிருக்கிறார்கள். 
 
தமிழ் , ஆங்கிலம்
 
தமிழ் , ஆங்கிலம் போன்ற மொழிப்பாடங்களை இலக்கணப்பிழை இல்லாமல் எழுதினால்
அதிக மதிப்பெண் பெற முடியும்.அதற்கு  என்ன செய்ய வெண்டும்? மனப்பாடம் 
செய்வது , எழுதிப் பயிற்சிப்பது ஒருமுறை..
இலக்கணத்தை நன்றாக கற்றுக் கொண்டு உங்கள் சொந்த வார்த்தைகளில் எழுதுவது இரண்டாவது முறை.  
எந்த முறை உங்களுக்கு வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்யுங்கள்.
 
அறிவியல்
 
அறிவியல் பாடங்களில்  வரும் விதிகள்போன்றவற்றை நம் சொந்த வார்த்தையில்
எழுதக் கூடாது. மாறாக புத்தகத்தில் உள்ளது போல் மனனம் செய்து அப்படியே எழுத
வேண்டும் மற்ற கேள்விகளை பொருளையும் , பெயரையும் மாற்றாமல் உங்கள்
சொந்தவார்த்தைகளில்எழுதவும்.ஒரு கேள்வியை படிக்கும் போதே அதை பகுதி
பகுதியாக பிரித்து படிக்கவும் , revision செய்வதற்கு வசதியாக ஒரு
நோட்டில்குறிப்புகள் எடுத்து கொள்ளவும் அதாவது ஒரு பக்க பதிலை கால்
பக்கத்திற்கும் குறைவாக இருப்பது போல் முக்கிய வார்த்தைகளை வைத்து (hint)
குறிப்பு எடுத்து கொள்ளவும். இது பரீட்சைக்கு படிக்கும்  இறுதி நேரத்தில்
உங்களுடைய நேரத்தை மிச்சப்படுத்தும்.   படங்களை அழகாக பாகங்கள் குறித்து
வரைந்து பழகவும்.
 
சமூக அறிவியல் பாடங்களில் உள்ளஆண்டுகளையும் நாடுகள் 
மற்றும் முக்கியமானவர்களையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஒரு தனி
நோட்டுப் போட்டு அவற்றை எழுதிப் பாருங்கள்.
 
எழுதும் முறை
படிப்பது ஒரு முறை என்றால் அதைப் பரிட்சையில் வெளிப்படுத்துவது மற்றொரு முறை, 
பரிட்ச்சையில் எவ்வாறு எழுதினால் அதிக மதிப்பெண்களை பெறலாம் என்பதற்கான
குறிப்புகளும் சில நுணுக்கங்களும் கிழே தரப்பட்டுள்ளன. அவற்றை வீட்டிலேயே
பயிற்சி செய்து பார்ப்பதன் மூலம் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற
இயலும்.

1.  படித்ததை எல்லாம் வெளிப்படுதுவதற்கல்ல தேர்வு. தேவையானவற்றை தெளிவாக உணர்த்துவதுதான் நல்ல விடைகள்.

2.அதிகமாக எழுதினால்தான் அதிக மதிப்பெண்கள்  கிடைக்கும் எனும் தவறான
மனப்பான்மை மாணவர்களிடம் காணப்படுகிறது, அதிக பக்கங்கள் அதிக மதிப்பெண்களை
பெற்றுத்தராது

 3.வினாத்தாளை வாங்கியவுடன் சிலர் பதில் எழுத ஆரம்பித்து விடுவார்கள் 
முழுவதுவமாக எழுதி முடித்தவுடன் வினாவை மறுபடியும் வாசித்தால் அவர்கள்
எழுதிய பதிலுக்கும் வினாவிற்கும் சம்பந்தம் இல்லை என்பது தெரியும்.
வினாவின் தொடக்கதை மட்டும் படித்து விட்டு எழுதியதால் இது போன்ற
பிரச்சினைகள் உருவாக வாய்ப்புள்ளது எனவே வினாத்தாளை முழுவதுமாக வாசிக்க
வேண்டும்.

4. பத்து நிமிடங்கள் எந்த வினாவிற்கும் பதில் எழுதாமல் நன்கு தெரிந்த வினாக்களை அடையாளங்கண்டு கொள்ள வேண்டும்

5. எல்லா கேள்விகளுக்கும் விடை தெரியும் என்றால் அவற்றில் நன்கு தெரிந்த
பதிலை  முதலில் எழுதுவது நல்லது. திருத்துபவர் மனதில் முதலில் ஏற்படுத்தும்
தாக்கம் சிறந்த தாக்கமாக அமையும் (the first impression is the best
impression) எனவே நன்கு தெரிந்த விடைகளை முதலில் எழுதுவது நல்லது.

 6. நன்றாக தெரிந்த வினாவிற்கு தேவைக்கு அதிகமாக எழுதி தேர்வின் பாதி
நேரத்தை வீணடித்து விடக் கூடாது ஒவ்வொரு கேள்விக்கும் கொடுக்கப்பட்ட
மதிப்பெண்ணை மனதில் கொண்டு தகுந்த நேரம் ஒதுக்க வேண்டும். எக:- 3 மனி நேரம்
பரீட்சை என்றால் 10 நிமிடம் – கேள்வி தாளை முழுவதுமாக ஒரு பார்வை பார்க்க 5
நிமிடம் – தெரிந்த விடைகளை தேர்ந்தெடுத்து வரிசைப்படுத்த அடுத்து ஒவ்வொரு
கேள்விக்கும் கொடுக்கப்பட்ட மதிப்பெண்ணை மனதில் கொண்டு தகுந்த நேரம்
ஒதுக்கி எழுத வேண்டும்.

7. பொது தேர்வுக்கு முன் பள்ளிகளில் நடக்கும் தேர்வுகளுக்கு
முக்கியத்துவம் கொடுத்து மேற்கூறிய முறையை பயிற்சி செய்து கொள்ளவும்.அழகான
கையெழுதுக்காக பயிற்சி செய்யவும், அழகிய முறையில் எவ்வாறு தேர்வு எழுதுவது
என்பதையும் காண்போம்

8. தேர்வில் அழகாக, மற்றும் தெளிவாக எழுதுவதன் மூலமாக திருத்துபவரின்
சிரமம் குறைகிறது, அவர் சிரமம் குறைந்தால் நம் மதிப்பெண் அதிகரிக்கும்.

9. பரிட்சை தாளை திருத்துபவர் எல்லா பலவீனங்களும் கொண்ட மனிதன் என்பதால்
அழகாக இல்லை என்றால் குறைந்த பட்சம் தெளிவாக எழுதும் மாணவர்கள் அதிக
மதிப்பெண் பெற வாய்ப்புள்ளது. எழுத்தைக் கொண்டே ஒருவருடைய மனப்பான்மையை ஒரு
வகையில் யூகிக்க முடிகிறது என்று கூறுகிறார்கள், அதிக அடித்தல்
திருத்தலுடன் எழுதுவது ஒருவருடைய நிலையற்ற மனப்பான்மையை எளிதில் காட்டி
விடும்.

10. அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுதுவதற்கு பெரும் சாதனை செய்ய
வேண்டிய்தில்லை, பொது தேர்வு தொடங்க இன்னும் நாட்கள் உள்ள இந்த தருணத்தில்
வெறும் படிக்க மட்டும் செய்யாமல் படித்ததை சிரமம் பர்க்காமல் எழுதி விடுவது
நாம் பரிட்சையில் செய்யும் பல தவறுகளை நமக்கு அடையாளம் காட்டி விடும்.
பயிற்சித் தேர்விலும் பொதுத் தேர்விலும் கீழ்கண்ட முறைகளை பின்பற்றுவதன்
மூலமாக சிறந்த முடிவுகளை பெற முடியும்.

அ) ஒவ்வொரு வார்தைக்கும்,வரிக்கும் இடையில் போதுமான இடைவெளி விட்டு
எழுதவும். ஆ) ஒரு பதிலில் உள்ள முக்கியமான கருத்துக்களை அடிகோடிட்டு
காட்டவும்.


 இ) அடிக்கோடிடுவதற்க்கு 2B என்ற கருமை அளவுடைய பென்சிலை உபயோகிப்பது
நல்லது.வண்ண எழுதுகோல்கள் (SKETCH PEN/PENCIL) உபயோகிப்பதை கண்டிப்பாக
தவிர்ப்பது நல்லது. ஏனெனில் முட்டாள் தனமான வண்ணங்களை அடிக்கோடிட
உபயோகிப்பது திருத்துபவரின் எரிச்சலை கூட்டும் நம் மதிப்பெண்ணை குறைக்கும்.
எனவெ சற்று கூடுதல் கருமையான (2B) பென்சில்களை உபயோகிப்பது நல்லது.

ஈ) அறிவியல் பாடங்களில் வரையும் படங்களை அழகாக வரைவதுடன் அனைத்து
பாகங்களையும் கட்டாயம் குறித்து காட்டுங்கள். முடிந்தால் நகல் எடுத்தது
போல் வரைவது நல்லது (இதற்காக அதிக நேரத்தை வீணாக்க வேண்டாம்) 
 
உ) முதல் கேள்வியில் அழகாக எழுதத் தொடங்கி , செல்ல செல்ல கோழிக்
கிறுக்கலாக மாறிவிடக் கூடாது. ஒவ்வொரு கேள்விக்கும் சரியான அளவு நேரம்
ஒதுக்கி எழுதுவதன் மூலமாக தேர்வின் கடைசி நிமிடத்தில் நடைபெறும் இது போன்ற
தவறுகளை திருத்திக் கொள்ளலாம். கடைசி நிமிடம் வரை படிப்பதை தவிர்த்துக்
கொள்வது நல்லது.

11. எவ்வாறு கேள்வித் தாளை வாங்கியவுடன் எழுத ஆரம்பிக்க கூடாதோ அதைப்
போலவே கடைசி வினாடி வரை எழுதக் கூடாது,குறைந்தது 5 நிமிடங்களுக்கு முன்னதாக
எழுதி முடித்துவிட்டு கீழ்க்கண்டவற்றை சரி பார்க்கவும்.

 > ஒவ்வொரு பதிலுக்குமான கேள்வியின் எண்ணை சரியாக எழுதி உள்ளீர்களா என சரி பார்க்கவும் இது மிக மிக முக்கியம்.
> ஒவ்வொரு பதிலிலும் முக்கியமான புள்ளிகள் அடிக்கோடிடப்பட்டுள்ளதா என்பதை சரிபர்க்கவும்.

> கணிதமாக இருந்தால் விடையின் கடைசியை அல்லது தீர்வை அடிக்கோடிட்டு
உள்ளீர்களா என்பதை சரி பார்க்கவும். > சூத்திரங்கள் பெட்டிக்குள்
எழுதப்பட்டுள்ளதா என்பதை சரி பார்க்கவும்.

12. மிகவும் முக்கியாமான ஒன்றை கவனத்தில் கொள்ளவும்.எக்காரணம் கொண்டும்
786(!), நாகூர் ஆண்டவர் துணை (!) பிஸ்மில்லாஹ், முருகன் துனை, போன்ற
வாசகங்களை விடைத் தாளில் எழுத வேன்டாம். இது முதல் பார்வையிலேயே உங்கள்
மீது தவறான எண்ணத்தை ஏற்ப்படுத்தலாம்.திருத்துபவர் மாற்று நம்பிக்கையாளர்
ஆகவோ அல்லது இறை நம்பிக்கை
அற்றவராக இருக்கும் பட்சத்தில் இவை எதிர் மறை விளைவுகளை உருவாக்கும்
வாய்ப்பும் உள்ளது.எனவே பக்தியை எழுத்தில் காட்டாமல் மனதில் நினைத்து எழுத
தொடங்கி விடுவது நல்லது. குறிப்பு: 786, நாகூர் ஆண்டவர் துணை என்பதெல்லாம்
இஸ்லாத்திற்கு எதிரானவை.

13. எல்லாவற்றிக்கும் மேலாக கடின உழைப்பும், அதிகமாக பயிற்சி தேர்வுகளை
எழுதுவதும் உஙகள் மதிப்பெண்களை கூட்ட உதவும். எல்லாம் வல்ல இறைவன்
உங்களுக்கு துணை புரிய பிரார்த்திக்கிறோம்.

Close