அதிரை ஆலடித்தெரு முஹைதீன் ஜும்மா பள்ளி அருகே மக்களை அச்சுறுத்தும் ஆபத்தான மின்கம்பம!

   அதிரை ஆலடித்தெரு முஹைதீன் ஜும்மா பள்ளி அருகே பல மாதங்களாக சாய்ந்த நிலையில் ஆபத்தான மின்கம்பம் ஒன்று உள்ளது. இது குறித்து பல முறை மின்வாரிய அதிகாரிகளிடம் தகவல் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்கின்றனர் இப்பகுதியினர்.

  மின்கம்பம் சாய்ந்த நிலையில் இருப்பதால் மின்சாரம் தாங்கி செல்லும் வயர்களும் தாழ்வான நிலையில் செல்கின்றன. இதனால் இப்பகுதியில் என்னேரம் வேண்டுமானாலும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

    அதிரை மின்சார வாரியம் இதனை உடனடியாக கருத்தில் கொண்டு இப்பரச்சனையை சரி செய்யுமாறு அதிரை பிறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

Advertisement

Close