அதிமுக தெரு முனை பிரச்சாரம்

வருகின்ற பாராளமன்ற தேர்தலுக்கு  முன்னோட்டமாக அதிரையில் நடைபெற்ற  அதிமுக தெரு முனை பிரச்சாரம் (14/02.2014) மாலை 6:30 மணியளவில் நமதூர் பேருந்து நிலையத்தில் பேருராட்சி துணைத் தலைவர் திரு.பிச்சை அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் நகர இணை செயலாளர் தமீம் அன்சாரி அவர்கள் மற்றும்  சிறப்பு பேச்சாளராக சம்சுல் கனி அவர்கள் கலந்து கொண்டு அஇஅதிமுக  கடந்த மூன்று வருடங்களாக சிறப்பாக ஆட்சி செய்து வரும் முதலவர் ஜெயலலிதா அவர்களின் ஆட்சியின் சிறப்பை எடுத்து கூறினார். இதில் அதிரை பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர். 

Close