அதிரை த.மு.மு.க வின் மனிதாபிமான செயல்..!

 
உடல்நிலை பாதிப்படைந்த 3 வாலிபர்கள் குறித்து த.மு.மு.க / ம.ம.ம கட்சியின்
அதிரை கிளை பொருளாளர் செய்யது முஹம்மது புஹாரி மற்றும் த.மு.மு.க தஞ்சை
தெற்கு மாவட்டச் செயலாளர் அஹமது ஹாஜா
ஆகியோர் நம்மிடம் வைக்கும் உருக்கமான வேண்டுகோள் !

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டம், மூங்கில்துரைப்பட்டு கிராமத்தில்
மேட்டூர் வடக்கு தெருவில் வசிக்கும் மஹபூப்கான் மனைவி சர்தார்னி
இவர்களுக்கு மூன்று ஆண் பிள்ளைகள்…. 


1. வாஹித்கான் [ வயது-21 படிப்பு 10], 2. அம்ஜத்கான் [ வயது-18, படிப்பு 7
], 3. சாரூக்கான் [ வயது-15, படிப்பு 6 ] இம்மூன்று குழந்தைகளுக்கும் கடந்த
7 ஆண்டு காலமாக ஒன்றின் பின் ஒன்றாக மூவருக்கும் தொடர்ந்து பக்கவாதம் நோய்
தாக்கி படுத்த படுக்கையாக இருப்பதினால் மருத்துவ சிகிச்சை செய்ய இயலாமல்
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகளின் தந்தை மஹபூக்கான்
இக்குடும்பத்தை விட்டு சென்றுவிட்டார்….. 

இதுவரை எங்கே இருக்கிறார் என்று எந்த தகவலும் கிடைக்கவில்லை….

இந்நிலையில் இம்மூன்று பிள்ளைகளை வைத்து மிகவும் சிரமப்படும் இச்சகோதரிக்கு
எந்த ஒரு வருமானமும் இல்லை…

பிள்ளைகளின் அனைத்து சுயதேவைகளையும் இவர் இல்லாமல் செய்து கொள்ளாத நிலை
இருப்பதினால் இப்பிள்ளைகளின் தாயே பிள்ளைகளுக்கு தேவையான அனைத்தையும்
செய்துகொண்டு வருவதால் இவரால் கூலி வேலைகளுக்கு கூட செல்ல முடியவில்லை…

ஆகையால் முகநூல் சொந்தங்கள் அனைவரும் இப்பதிவினை லைக் செய்யாமல் உங்களின்
முகநூல் நண்பர்களுக்கு ஷேர் செய்து இப்பிள்ளைகளுக்கும் இச்சகோதரிக்கும்
உங்களால் முடிந்த உதவிசெய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்…. 

உதவிக்கு: வங்கி விபரம்- Holder Name : SARDHANI M A/C.No. :
18230100013606 Bank Name : BANK OF BARODA Branch : MOONGILDURAIPATTU
BRANCH IFSC Code : BARB0MOONGI Dist.-villupuram…

முகநூல் அறிவிப்பை பார்வையிட்ட அதிரைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், தொடர்ந்து
பல்வேறு மருத்துவ, வாழ்வாதார உதவிகளை முன்னின்று செய்துவரும் லண்டன்வாழ்
அதிரையர் S.A இம்தியாஸ் அஹமது அவர்கள் மூலம் திரட்டப்பட்ட ரூபாய் 87,500/-
ஐ, த.மு.மு.க அதிரை நகர நிர்வாகிகளுக்கு அனுப்பி அவற்றை நேரடியாகச் சென்று
வழங்க கேட்டுக்கொண்டார்…. 

இதைதொடர்ந்து நேற்று முன்தினம் அதிரை நகர த.மு.மு.க / ம.ம.க நிர்வாகிகள்
பாதிப்படைந்த குழந்தைகளை நேரடியாக பார்வையிட்டு உதவியை வழங்குவதற்காக
வாகனம் மூலம் அதிரையிலிருந்து வெகுதொலைவில் இருக்கும் மூங்கில்துரைப்பட்டு
கிராமத்தை நோக்கி புறப்பட்டுச்சென்றனர்…. 

விழுப்புர மாவட்ட ம.ம.க செயலாளர் முஹம்மது அலி அவர்களோடு நேரடியாக
வீட்டிற்கு சென்று பாதிப்படைந்த 3 வாலிபர்களையும், தனது பிள்ளைகளுக்காக
தாய் செய்கிற பணிவீடைகளையும் நேரடியாக பார்த்து அறிந்துகொள்கின்றனர்…. 

லண்டன் வாழ் அதிரையர் இம்தியாஸ் அஹமது வழங்கிய ரூபாய் 87,500/-, துபாய்
வாழ் அதிரையர் தாஹா அவர்கள் வழங்கிய உதவியோடு, அங்கே சென்ற தமுமுக
நிர்வாகிகள் இந்த குடும்பத்தின் ஏழ்மை நிலையை அறிந்துகொண்டு தங்களின்
பங்காக வழங்கிய ரூபாய் 8,700 /- ஐ சேர்த்து மொத்தம் ரூபாய் 97,200/- ஐ
வழங்கினார்கள்….

உதவியை பெற்றுக்கொண்ட சகோதரி சர்தார்னி நன்றியை தெரிவித்துக்கொண்டதோடு
வழங்கியோருக்கு துவாவும் செய்தார்…

Holder Name : SARDHANI .M 
A/C.No. :
18230100013606 

Bank Name : BANK OF BARODA 
Branch : MOONGILDURAIPATTU
BRANCH 

IFSC Code : BARB0MOONGI Dist.-villupuram…
-tmmk facebook

Close