அதிரையில் AFFA நடத்தும் கால்பந்தாட்ட போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் நாகூர் அணியினர் வெற்றி !

அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேஷன் (AFFA) நடத்தும் 12 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால் பந்து தொடர் போட்டி இன்று (04-05-2015) மாலை 5 மணியளவில் ஷிஃபா மருத்துவமனை எதிரே அமைந்துள்ள கிராணி மைதானத்தில் மிக சிறப்பாக துவங்கியது.

இன்றைய ஆட்டத்தில் நாகூர் அணியினரோடு காரைக்குடி அணியினர் மோதினார்கள். விறுவிருப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் 1 கோல் அடித்து நாகூர் அணியினர் வெற்றி பெற்றனர்.

முதல் நாள் ஆட்டத்தை காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக வருகை தந்து ரசித்தனர்.நாளை தினம் இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளது. 

Advertisement

Close