அதிரையின் பல பகுதிகளில் உற்சாகமாக நடைப்பெற்ற குடியரசு தின விழா…!

இன்று நம் நாட்டின் குடியரசு தின நாடெங்க்கும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் பல பகுதிகளிலும் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் பல பகுதிகளில் கொடியேற்றி தங்கள் தேசப் பற்றை வெளிப்படுத்தி வருகின்றனர்.

 இதற்க்கு நமதூர் ஒன்றும் சலைத்தது கிடையாது என்பதை வெளிக்காட்டும் விதமாக நமதூரின் பல இடங்களிலும் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி குடியரசு தினத்தை வெகு விமர்சையாக கொண்டாடி தங்கள் தேசப் பற்றை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதிரை பைத்துல்மாலில் நடைப்பெற்ற குடியரசு தின விழாவில் பேராசிரியர் ஹாஜாமுகைதீன் அவர்கள் வரவேற்புரை வழங்க பேராசிரியர் பரக்கத் சார் அவர்கள் கொடியேற்றி விழாவினை சிறப்பித்தார்கள்.

இது போல் அதிரை இமாம் ஷாபி பள்ளியின் நடைப்பெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் அதிரையின் பிரபல பல் மருத்துவர் டாக்டர் ஃபஜ்லுர் ரஹ்மான் அவர்கள் கொடியேற்றி விழாவினை சிறப்பித்தார்கள்.

இதுபோல் காதிர் முகைதீன் கல்லூரி, காதிர் முகைதீன் ஆண்கள் மற்று பெண்கள் பள்ளி, ஏ.எல் மெட்ரிக் பள்ளி, அல்-ஷனா, E.P மாடல் பள்ளி, வெஸ்டர்ன் நர்சரி பள்ளி, அதிரை வாய்க்கால் தெரு நடுநிலைப் பள்ளி, அதிரை அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் அதிரையில் உள்ள பிற அரசு, தனியார் பள்ளிகளில் குடியரச்சு தின மிக சிறப்பாக நடைப்பெற்றது.


 

Close