திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் பட்டமளிப்பு விழா

                   


              திருச்சி ஜமால்முகம்மது கல்லூரியின் சுயநிதி பிரிவு படிப்புகளுக்கான பட்டமளிப்பு விழா நேற்று கல்லூரி கருத்தரங்கில் நடைபெற்றது.
              விழாவில்,  சென்னை ஆல் இந்தியா வானொலி நிலையத்தின் செய்திப்பிரிவு இயக்குநர் பழனிச்சாமி சிறப்பு விருந்தினராக கல ந்து கொண்டு 1,081 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். 
              இந்த விழாவில், 620 இளங்கலை மாணவர்கள், 338 முதுகலை மாணவர்கள், 123 எம்பில் மாணவர்கள் ஆகியோருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. மேலும் பாரதிதாசன் பல்கலைக்கழக ஒருங்கிணைந்த தகுதித் தேர்வில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்பிரிவில் சிறப்பு தகுதி பெற்ற 28 மாணவர்கள் ஜமால் கல்லூரி நிர்வாகம் சார்பில் கவுரவிக்கப்பட்டனர்.
               விழாவில்,கல்லூரி தாளாளர் காஜாநஜிமுதீன், முதல்வர் முகம்மது சிந்த ஷா, துணைமுதல்வர் ஷேக் முகம்மது, சுயநிதி பிரிவு இயக்குநர் அப்துல்காதர் நுகால் மற்றும் பல்வேறு துறை தலைவர்கள்,  பேராசிரியர்கள், பட்டதாரி களின் பெற்றோர்       ஆகியோர் கலந்து கொண்டனர்.
Close