பிளஸ் டூ மாணவர்களுக்கு சக்ஸஸ் டிப்ஸ் : கம்ப்யூட்டர் சயின்ஸ்

பிளஸ் டூ பாடங்களில் மிக சுலபமாகப் படிக்கக்கூடிய பாடம் கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகும். இப்பாடத்தில், செயல்முறைக்காக  (Practicals) 50 மதிப்பெண்களும், எழுத்துத் தேர்வுக்கு  150 மதிப்பெண்களும் வழங்கப்படுகின்றன.


150 மதிப்பெண்களில் 75 மதிப்பெண்கள் ஒரு
மதிப்பெண் கேள்விகளாகும். எனவே  75 மதிப்பெண்களையும் முழுமையாகப் பெற
விரும்பும் மாணவர்கள், பாடம் முழுவதையும் படிக்க வேண்டியது அவசியம்.
பாடத்துக்கு உள்ளே உள்ள முக்கிய தகவல்களையும் நன்கு படித்து வைத்துக்கொள்ள
வேண்டும். 75 மதிப்பெண்கள் கேள்விகளில், ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு
விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதற்கு சரியான பதிலை ˆ–OMR Sheet-ல் குறிக்க வேண்டும்.

அடுத்து 2 மதிப்பெண் கேள்விகள். இதில்  25
கேள்விகள் கேட்கப்படும். 20 கேள்விகளுக்கு பதில் எழுத வேண்டும். மொத்தம் 40
மதிப்பெண்கள். அடுத்து 5 மதிப்பெண் கேள்விகள். இதில் 10 கேள்விகள்
கேட்கப்படும். 7 கேள்விகளுக்கு பதில் எழுத வேண்டும். மொத்த மதிப்பெண்கள்
35.

கம்ப்யூட்டர் சயின்ஸைப் பொருத்தவரை  2
மற்றும் 5 மதிப்பெண் வினாக்களே, மாணவர்களின் நேரத்தை மிச்சப்படுத்தி
மதிப்பெண்களை அதிகரிக்க வழியேற்படுத்துகிறது. இதில் நீங்கள் தேர்வு
செய்யும் வினாக்களே உங்களது நேரத்தை மிச்சப்படுத்தி, அதிக மதிப்பெண்களைப்
பெற்றுத் தரும்.  

 

உதாரணமாக, இரண்டு மதிப்பெண் வினாவைத் தேர்வு செய்யும் முறை: உரை பதிப்பித்தல் என்றால் என்ன? (What is mean by Text Editing?)
என்ற கேள்விக்கான பதில் ஒரு வரி மட்டுமே. இந்தக் கேள்வியைத்
தேர்ந்தெடுப்பதால், நேரம் மிச்சமாவதோடு பிழைகள் குறையும். ஆனால், ஒரு
ஆவணத்தில் தேவைப்படும் உரையை எவ்வாறு தேர்ந்தெடுப்பாய்? (How will select a Text in a Document?)
என்ற கேள்விக்கு மூன்று அல்லது நான்கு வரிகளில் பதில் எழுத வேண்டும்.
இதில் பிழை வரவும் வாய்ப்புள்ளது. எனவே சரியான வினாவை, நன்கு தெரிந்த
வினாவைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.

 பாடங்களில் உள்ள ஒவ்வொரு வினாவும் முக்கிய
வினாதான். கடந்த பல வருடங்களாக பொதுத் தேர்வில் கேட்கப்பட்டு வரும்
கேள்விகளில் மிக முக்கிய கேள்விகளாக ஒரு சில கேள்விகளைக் குறிப்பிடலாம்.
மற்ற கேள்விகளுடன், அந்தக் கேள்விகளையும் மாணவர்கள் மிகச் சிறப்பாகத் தயார்
செய்து வைத்துக்கொள்ளவும்.

ஒரு மதிப்பெண் வினாக்களில் மிக அதிகமாக கேட்கப்படும் வினாக்கள்:
F1, F2, F5, F7, F11 பொத்தான்களின் பயன்பாடு, அட்டவணை (Table) சார்ந்த வினாக்கள், வடிகட்டல் (Filter) சார்ந்த வினாக்கள், தரவுத் தளத்தின் புல வகைகள் (Database Field types), SQL, ATM,  JPEG,  GIF, MIDI, BPO, CBT, ITES, MPEG, MMS ஆகியவற்றில் ஒன்றின் விரிவாக்கம் (Expansion), Quick Time படிவக் கோப்புகளின் விரிவு, ‡Normal View, Outline View போன்ற வினாக்கள், Insert  சார்ந்த வினாக்கள், குறுக்கு வழிகள் சார்ந்த வினாக்கள் Format மெனு சார்ந்த வினாக்கள், Tools மெனு சார்ந்த வினாக்கள், Edit  மெனு சார்ந்த வினாக்கள், Tab, Shift Tab ஆகியவற்றின் பயன்பாடு, பொருள் (ˆObject) சார்ந்த வினாக்கள், பல்லுருவாக்கம் (Polymorphism), உணவுப் பொதியாக்கம் (encapsulation), மரபுரிமம் (Inheritance)என்பதன் பொருள் சார்ந்த வினா, செயற்குறி (ˆOperator) வகைகளின் எண்ணிக்கை, அணி (array) சார்ந்த வினாக்கள், Parameters -இன் செயற்கூறுகளின் பயன்பாடு, அளபுருக்கள் (Parameters) சார்ந்த வினாக்கள், ஆக்கிகள், அழிப்பிகள் சார்ந்த (Constructor Destructor) வினாக்கள் போன்றவை மிக முக்கிய வினாக்களாகும்.

 இவை மட்டுமல்லாமல், பாடப்
புத்தகத்திற்குள் இருக்கும் ஒரு வரிச் செய்திகளையும் தவறாமல் படிக்கவும்.
அப்போதுதான் 75-க்கு 75 மதிப்பெண்கள் பெறுவது சாத்தியமாகும்.

 5 மதிப்பெண் கேள்விகளில் முக்கிய கேள்விகள்: Volume I
உரையைத் தேர்ந்தெடுக்கும் முறைகள் (Selecting text methods), வேண்டிய சொல் அல்லது உரைப்பகுதியைக் கண்டுபிடித்து மாற்றுதல் (Find and Replace a text), ஆவணத்தை தட்டச்சு செய்து முடித்தபின் எழுத்துப்பிழை சரி செய்தல் (Checking spell after the document is typed), பத்தி உரையாடல் பெட்டி மூலம் உரையை உள்தள்ளுதல் (Indenting text with the paragraph dialogbox), தானியங்கி சரிசெய்யும் பட்டியலில் ஒரு சொல்லை சேர்த்தல் (creating Autocorrect  Entry), அட்டவணை வடிவூட்டல் கருவிப்பட்டை (Table Formatting Toolbar), புல்லட் வரிசையை உருவாக்குதல் (Bullets list Creation), அட்டவணைத்தாளில் வரைபடங்களுடன் செயல்படல் (Create Charts in Staroffice Calc), பொருள் சேர்த்தல் (Inserting Objects), அட்டவணைச் செயலியால் விளையும் நன்மைகள் (Advantages (features) of using Electronic Spreadsheets), அட்டவணைத் தாளில் நுண்ணறைகள், வரிசைகள், நெடுவரிசைகள் ஆகியவற்றை சேர்த்தல் (Inserting Cells, Rows and Columns), ஓரத்தை மாற்றும் வழிகள் (–Methods of changing the margin), ஃபில் கட்டளை மூலம் தரவு வரிசைகளை உருவாக்குதல் (How will you Fill Series?), சார்புகள் என்றால் என்ன? எப்படி சார்புகளைச் சேர்ப்பது? (What is Function? How will you insert Function in worksheets?), தரவு தளத்தைக் கையாளுதல் (–Manipulation of Database), அட்டவணைத்தாளை வடிவமைத்தல் (Formatting the Staroffice Calc).

Volume II -இல் கேட்கப்படும் முக்கியமான 5 மதிப்பெண் கேள்விகள்:
குறிப்பு மூலம் அழைத்தல் (call by reference), மதிப்பு மூலம் அழைத்தல் (Call by Value), செயற்குறிப்பணி மிகுப்புக்கான விதிமுறைகள் (Rules for operator overloading ), செயற்கூறு பணிமிகுப்பு (Function overloading), மாறிகளின் வரையெல்லை விதிமுறைகள் (Scope Rules of Variables), மரபுரிமத்தின் வகைகள் (Types of Inheritance), மடக்கிகள் என்றால் என்ன? For மடக்கினை விவரி அல்லது ஒரு Entry Control  மடக்கினைப் பற்றி எழுது (What is Loop? Explain anyone Entry Control loop or For loop), Switch  கூற்றினை விவரி (Explain about Switch), கீழ்வரும் புரோகிராமுக்கான அவுட்புட்டை எழுது (Write the output of the following) என்ற கேள்விக்கு, புத்தகத்தின் பக்கம் எண் 185, 187, 191, 206, 178 ஆகிய பக்கங்களில் உள்ள புரோகிராம் (நிரல்களுக்கான) அவுட்புட்டை நன்றாகப் பார்த்து மனதில் பதிய வைத்துக்கொள்ளவும்.

ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு, ஓ.எம்.ஆர்.
தாளில்தான் மாணவர்கள் விடையளிக்க வேண்டும். இந்த ஓ.எம்.ஆர்.தாளை
ஆசிரியர்கள் திருத்துவதில்லை. இந்தத் தாளை கம்ப்யூட்டர்தான் மதிப்பீடு
செய்கிறது. எனவே மாணவர்கள் ஓ.எம்.ஆர். தாளில் விடையளிக்கும்போது கூடுதல்
கவனத்துடன் செயல்படவேண்டும். ஒரு வினாவிற்கு இரு பதில்களை தவறாகக்
குறிப்பது, சரியான பதிலை முழுமையாக நிரப்பாமல் விடுவது போன்றவை மாணவர்கள்
பொதுவாக செய்யும் தவறுகள். இதனால் மதிப்பெண்களை இழக்க வேண்டி வரும். எனவே
முதலில் வினாவுக்கான சரியான பதிலை தேர்ந்தெடுத்து, அந்தப் பதிலுக்கான
வட்டத்தின் மீது பென்சிலால் ஒரு சிறிய டிக் அடித்துக் கொள்ளலாம். பின்னர்
மீண்டும் சரிபார்த்து சரியான பதிலை உறுதிசெய்து கொண்டபின் வட்டத்தை
முழுமையாக நிரப்பவும். மறக்காமல் அந்த டிக்கை, ரப்பரால் அழித்துவிடவும்.

எல்லா மெனுக்கள், கட்டளைகள்,
குறுக்குவழிகள் ஆகியவற்றைக் கண்டிப்பாக கறுப்பு மையால் எழுத வேண்டும்.
கம்ப்யூட்டர் அறிவியலில் பல வினாக்களுக்கு பதில்களை பாயிண்ட் பை
பாயிண்ட்டாக எழுதவேண்டி இருப்பதால், அவற்றை புல்லட் போட்டு எழுதினால்
பார்வையாக இருக்கும். Icons (பணிக்குறி) நன்றாக, தெளிவாக வரைய வேண்டும். வேண்டிய சொல் அல்லது உரைப்பகுதியை கண்டுபிடித்தல், வேறு இடத்தில் இடுதல் (find and replace) போன்றவற்றுக்கு கட்டாயமாக படம் வரைதல் வேண்டும்.

கம்ப்யூட்டர் சயின்ஸைப் பொருத்தவரை, பல
மெனுக்களும், கட்டளைகளும், குறுக்கு வழிகளும் உள்ளன. அவற்றைப்
படித்துவிட்டு ஒரு முறையாவது திருப்பி எழுதிப் பார்க்கவேண்டும். இதனால்
அதில் ஏற்படும் தவறுகள் சரி செய்யப்படும். முக்கியக் குறிப்புகள்,
கட்டளைகள், மெனுக்கள், குறுக்கு வழிகள் (Short cuts), சாவிகள் (Keys)
போன்வற்றை ஒரு காகிதத்தில் எழுதி, அடிக்கடி உபயோகப்படுத்தும் அறையில்
ஒட்டி வைத்துக் கொள்ளலாம். இதனால் நாம் பார்க்கும்போது திரும்பத் திரும்ப
மனதில் பதிய வைத்துக்கொள்ள முடியும்.
Close