அதிராம்பட்டிணம் கடலோர பாதுகாப்பு படை சப்–இன்ஸ்பெக்டர் திடீர் மரணம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கீழபாலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்தானகிருஷ்ணன் (50). இவர் அதிராம்பட்டிணம் கடலோர பாதுகாப்பு குழுமத்தில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் சந்தான கிருஷ்ணனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே அவரை தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அதிராம் பட்டிணம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப் பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சந்தான கிருஷ்ணனுக்கு கலா என்ற மனைவியும், அபிராமி என்ற மகளும், ஸ்ரீராம் என்ற மகனும் உள்ளனர்.
-maalai malar
Close