அதிரையில் மக்கள் கூட்டம் கூட்டமாக கலந்துக்கொண்ட TNTJவின் பொதுக்கூட்டம்

அதிரையில் இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக “சிறை
செல்லும் போராட்டம் ஏன்?” என்பதை விளக்கும் நோக்கில் இன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு அதிரை தக்வா பள்ளிவாசல்
அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்க்காக பக்கத்து
ஊர்களில் இருந்து ஐந்திற்க்கும் மேற்பட்ட வேன்கள் பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திற்க்கு
வந்தன. இதில் நமதூர் மற்றும் அருகில் உள்ள ஊர்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பலரும் கலந்துக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியை கிளை செயலாளர் அனவர் அலி அவர்கள் தலைமை தாங்கினார்கள்.
இதில் மாநில துணை தலைவர் எம்.எஸ். செய்யது இப்ராஹீம் அவ‌ர்கள்
(அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி) என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். 
இதனை அடுத்து
சிறை செல்லும் போராட்டம் ஏண் என்னும் தலைப்பில் மாநில பொதுச்செயலாளர் கோவை ஆர். ரஹ்மத்துல்லா
அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.




Close