அதிரையில் மருத்துவ வசதி இல்லாமல் தவிக்கும் நமதூர் மக்களின் பரிதாப நிலை..!

அதிராம்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டத்தின்
முக்கியமான பகுதிகளில் இதுவும் ஒன்று.  கல்வி, தொழில்நுட்பம், கலை, விளையாட்டு, வணிகம், போக்குவரத்து மற்றும் பல வசதிகளை உள்ளடக்கியது
இந்த ஊர் என்று பலரால் அறியப்பட்டது. ஆனால் இந்த ஊரில் மிக மிக முக்கியமான ஒரு
வசதியான மருத்துவ வசதி  இருந்தும் அது பயனற்று செயல்படாமல்
உள்ளது என்பது வருத்ததிற்குறிய செய்தி. 
இதனால் நம் மக்கள் படும்
துயரம் எண்ணில் அடங்காதது. ஒருவருக்கு கீழே விழுந்து கை உடந்துவிட்டது, சாலை விபத்து, இரவில் நெஞ்சு வலி,  என்றால் கூட
பட்டுக்கோட்டைக்கு ஆட்டோ பிடித்து தூக்கி செல்லும் ஆவல நிலை. இது போன்ற அடிப்படை
மருத்துவ உதவிக்கு முதலுதவிக்கு கூட இரவில் வந்து பரிசோதிக்கும் மருத்துவர் கூட
நமதூரில் இல்லை என்பது தான் அதிரையின் இன்றைய நிலை.
அதிரையில் பல தனியார்
மருத்துவமனைகளும், அரசு மருத்துவமனையும் உள்ளன. இவை அனைத்தும் இருந்தும் ஒரு
அவசர சிகிச்சைக்கு கூட நமதூர் மக்களால் இங்கு பரிசோதிக்க முடியாமல் பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், சென்னை ஆகிய பகுதிகளுக்கு பல
துயரங்ளுடன் பயனத்துக்காக ஒரு பெரும் தொகையையும் ஒதுக்கி செல்கின்றனர். 
ஏன் இந்த நிலை, இந்த நிலை எப்பொழுது மாறும்.
அதிரை மக்களே! அதிரை இளைஞர்களே! அதிரை அமைப்புகளே! அயல்நாட்டில் வசிக்கும் அதிரை
அன்பர்களே! சமுக ஆர்வலர்களே! முறையான மருத்துவ வசதி இன்றி தவிக்கும் நமதூரின்
நிலையை சற்று பாருங்கள். இதற்க்கு எப்பொழுது பிறக்கும் விடிவுகாலம்?
பொழுதுபோக்கு, விளையாட்டு போன்ற‌ ஆடம்பரமான
செலவுகளை செய்யும் நாம் இதை ஏன் கவனத்தில் கொள்ளவில்லை? வீனான விஷயங்களுக்கு நேரத்தை
செலவழிக்கும் நாம் இதற்க்கு ஏன் நம் நேரத்தை செலவலிக்க தயங்குகிறோம்?
மருத்துவ வசதி என்பது
ஒவ்வொரு ஊரின் அத்தியாவசிய தேவை. காய்ச்சல், தலைவலிக்கு மருந்துவம் பார்க்கும் மருத்துவமனை
மட்டும் நமதூருக்கு போதுமா? அவசர சிகிச்சைக்கு என்னேரமும் செயல்படும் மருத்துவமனை அதிரைக்கு
எப்பொழுது வரும்? அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணிநேர சேவை எப்பொழுது?
இவை அனைத்தும் நம் மனதில்
கேள்வியாக மட்டுமே இருக்கும், இதை வெளிகொண்டு வாருங்கள்! அதிரையில் ஒரு மருத்துவ
புரட்சியை உருவாக்குங்கள்! அதிரையின் நலனுக்காக பாடுபடும் அதிரையின் பொது அமைப்புகளே!
அதிரையை வருங்காலத்தில் வழிநடத்த இருக்கும் இளைஞர்களே! நமதூரின் இந்த நிலையை
மனதில் வைத்து ஒன்றுகூடி கலந்துரையாடுங்கள். ஒற்றுமையுடன் நல்லதொரு முடிவை
எடுக்குமாறு கோரிக்கைகளுடன் நிறைவு செய்கிறோம்..
                                          இப்படிக்கு,
அதிரையின் நலன் கருதி  பதிவோர் (அதிரை பிறை)

Close