அதிரை அன்றும் இன்றும்..! (அறிமுகம்)

” அதிரை அன்றும் இன்றும்” என்னும் தொடரான இதில்
அதிரையை பற்றிய உண்மையான வரலாறுகள் இன்ஷா அல்லாஹ் வாரத்துக்கு 1 முறை நம் அதிரை
பிறை தளத்தில் பதிய உள்ளோம்.
உலகிலேயே அழகிய வரலாறுகளையும் பாரம்பரிய பெருமைகளையும் சுமந்து
நிற்பது இந்திய நாடு என்றால் மிகையாகாது. அத்தகைய நம் இந்திய நாட்டில் உள்ள தமிழ்கத்தில்
மிகவும் பழமையான நகரம் என்றால் தஞ்சையும் மதுரையும் தான். இதில் தஞ்சை மாவட்டத்தில்
உள்ள அதிராம்பட்டினம் ஊரான இது பழங்காலத்தில் இருந்து பெரும் வனிக கேந்திரமாகவும் கடல்
வழியாக வனிகம் செய்யும் வெளிநாட்டவர்களுக்கு இது பண்டமாற்று பகுதியாகவும் இருந்தது
அதிரை துறைமுகம் என்றால் அது மிகையாகாது. இப்படிப்பட்ட நமதூர் மக்களின் பழக்க வழக்கங்களும்
பேச்சு வழக்கும் பிற பகுதி மக்களை நமதூரின் பக்கம் கவர்ந்து இழுக்கும் கருவியாக இருக்கிறது.
அது போல் அதிரை மக்களின் சுவையான உணவு முறைகளும் இஸ்லாமிய முறைபடி
நடத்தப்படும் அழகான திருமண நிகழ்ச்சிகளும், மாற்று மத நண்பர்களிடம் ந‌ட்புற‌வு கொண்டு பழகுவது
போன்ற குண‌ங்கள் தான் நமதூர் மீது பிற ஊர்வாசிகள் அதிக அபிப்ராயம் கொண்டிருப்பதற்க்கு
காரணம்.
அதுபோன்று அதிரையின் வரலாற்று பெருமையை தாங்கி நிற்க்கும் அதிரை
மரைக்காயர் பள்ளிவாசல், மேலத்தெரு, பெரிய ஜும்மா பள்ளி,
கடற்கரை தெரு ஜும்மா பள்ளி,
தக்வா பள்ளி, அதிரை பெரிய மீன் மார்க்கெட், அதிரை நூலகம், அதிரை குளங்கள், அதிரை மக்கள், அதிரை தெருக்கள் ஆகியவற்றின் சரித்திரங்களையும்,
வரலாறுகளையும் நாம் இத்தளத்தில்
பதிய உள்ளோம்.
இது போன்று வரலாற்று பெருமைக்குறிய அதிரையின் சரித்திரம் மற்றும்
சிறப்பம்சங்களை நாம் பதிவதற்கு மகிழ்ச்சியடைகிரோம்.
Close