அதிராம்பட்டினமும் கல்விநிலையும்..! (முன்னுரை)

நஞ்சையும், புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சை மாவட்டத்தில் வங்கக் கடற்கரையோரம் புதுக்கோட்டை
மற்றும் திருவாரூர் மாவட்ட எல்லைகளையொட்டி அமைந்துள்ள ஒரு பேரூர் அதிராம்பட்டினம்.
2000 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியை
அரசாண்ட  ‘அதிவீரராம பாண்டியன்’ என்னும் மன்னனின் பெயரைத் தாங்கி ‘அதிவீரராம பட்டினம்’ என வழங்கப்பட்டு வந்ததாகவும் அப்பெயர் நாளடைவில்
சுருங்கி அதிராம்பட்டினம் என வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இவ்வூரில் மிகப்பெரும்
உலமாக்களும், கொடை வள்ளல்களும்,
இலக்கியப் புலவர்காளும்,
இந்தியச் சுதந்திர தியாகிகளும்,  சமுக சேவகர்களும் வாழ்ந்திருக்கிறார்கள், வாழ்ந்தும் வருகிறார்கள். குறிப்பிட்டுச் சொல்லும்படியான
தொழிர்சாலைகளோ, வணிக மையங்களோ,
அரசு அலுவலாகங்களோ இல்லாவிடினும்
இங்கு கல்விக்கூடங்களுக்கு பஞ்சமில்லை. L.K.G முதல் M.Sc (IT), PhD வரை கற்கக் கூடிய பல்வேறு கல்விக்கூடங்கள்
இங்கு உள்ளன.
அடுத்த பதிவில்:  1949 ஆம் ஆண்டுக்கு முன் அதிரையின் கல்விநிலை
தொகுப்பு மற்றும் ஆக்கம்:
ஹாஜி S.K.M. ஹாஜா முகைதீன், M.A.,B.Sc,B.T
தலைமையாசிரியர் (ஓய்வு)

காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
Close