அலட்சியம் காட்டும் அதிரை மின்சார வாரியம்!

அதிரை வாய்க்கால் தெரு அருகே இன்று காலை மின் கம்பி அறுந்து கீழே தொங்கி கொண்டு இருந்தது. இந்த மின் கம்பி அறுந்து கீழே தொங்கி கொண்டு இருந்ததை பார்த்த சமூக ஆர்வலர் ஷாகுல் ஹமீது அவர்கள் அதிர்ச்சி அடைந்தார்.உடனே மின்சார வாரியத்துக்கு தகவல் கொடுத்தார்.மின்சார ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வருவதில் காலதாமதம் ஏற்ப்பட்டது.இதனால் ஷாகுல் ஹமீது மற்றும் அந்த பகுதி மக்கள் யாரையும் அந்த பகுதிக்குள் வராமல் பாதுகாத்தனர்.இறுதியாக மின்சார வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மின் இணைப்பை துண்டித்து அறுந்து தொங்கி கொண்டு இருந்த மின்கம்பியை சரி செய்தனர்.

Advertisement

Close