அதிரை பேருந்துகளில் மாணவர்களின் வாழ்வா சாவா பயணம்! (மறுபதிப்பு)

மாணவர்களை பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்பிவிட்டு வீட்டில் பிள்ளைகளுக்காக காத்திருக்கும் பெற்றோர்களின் கவனத்திற்க்கு! கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னையில் பேருந்துகளின் படியில் நின்று (FOOT BOARD) பயணம் செய்து மூன்று கல்லூரி மாணவர்கள்
விபத்துக்குள்ளாகி உயிர் இழந்தனர். 

இந்த விபத்தை அடுத்து தமிழக அரசு சில விதிமுறைகளை பேருந்தில் பயணம் செய்யும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விதித்தது. ஆனால் இந்த விதிமுறை சென்னை போன்ற பெரு நகரங்களில் மட்டும் தான் அமலில் உள்ளன. ஏன் இந்த விதிமுறை அதிரை போன்ற நகராட்சிகளிலும்,பேரூராட்சிகளிலும்,கிராமங்களிலும் அமலுக்கு வரவில்லை என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. இந்த சட்டம் நமதூரில் நடைமுறை படுத்தவில்லை என்பதற்க்கு கீழே உள்ள புகைப்படங்கள் ஒரு சான்று. 

                                                            

                                                       

இந்த புகைப்படங்கள் இண்டெர்நெட்டில் தேடி எடுக்கப்பட்டதோ, இல்லை வேறு ஊர்களில் உள்ள பேருந்துகளில் மாணவர்கள் சென்ற புகைப்படங்களோ இல்லை, மாறாக இவை இன்று காலை 9:00 மணிக்கு அதிரை கல்லூரி மாணவர்கள் தனியார் பேருந்து ஒன்று மற்றும் அரசு POINT TO POINT  பேருந்தின் படிகளில் தொங்கல் பயணம் மேற்க்கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஆகும். 
பெற்றோர்கள் தன் மகன் பள்ளிக்கோ அல்லது கல்லூரிக்கோ செல்லும் போது எவ்வளவு கனவுகளுடன் அனுப்பிவைக்கிறார்கள் தெரியுமா? இதை அறியாத மாணவர்கள் தான் இவ்வாறு பயணம் மேற்கொள்வார்கள். இப்படி செல்பவர்களிடம் ஏன் இப்படிப்பட்ட ஆபத்தான பயணம் செய்கிறீர்கள்? என்று கேட்டால் கல்லூரிக்கு நேரமாச்சு வேறு என்ன செய்ய முடியும் என்கிறார்கள், மேலும் சிலர் பேருந்து சரியான நேரத்திற்க்கு வருவதில்லை என்று குறை சொல்கிறார்கள், நாம் சிந்திக்க வேண்டும் என்றாவது நாம் சரியான நேரத்திற்க்கு பேருந்து நிறுத்ததிற்க்கு வருகிறோமா…? பதில் இல்லை. ஏன் அலெட்சியம், விளைவு உயிர்ச்சேதம், பொருட்சேதம் இன்னும் ஏராளம், மேலும் இதனால் நாம் மட்டும் கஷ்டப்படமாட்டோம், நம் பெற்றோர்கள், உறவினர்கள் அனைவரும் கஷ்டப்படுவார்கள் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
இதை தடுக்க ஒரே ஒரு எளிமையான வழி என்ன என்றால் வழக்கமான நேரத்தை விட சிறிது நேரம் முன்பே பேருந்து நிறுத்ததிற்க்கு சென்றால் பேருந்துகள் பெரும்பாலும் கூட்டம் இல்லாமல் தான் செல்லும் அதில் சென்றால் பல வகைகளில் பயன் உண்டு.
மேலும் இப்படிப்பட்ட ஆபத்தான பயணத்தை தடுக்க பள்ளி, கல்லூரிகள் மாணவர்களின் மத்தியில் விழிப்பிணர்வுப் பிரச்சாரம் மேற்க்கொள்ள முன் வரவேண்டும். பேருந்து நடத்துனர்கள் ஒரு அளவுக்கு மேல் மக்களை பேருந்துக்குள் தினிக்காமல் இருக்க வேண்டும். தமிழக அரசு கொண்டுவந்த சட்டத்தை அதிரை காவல் துறையினர் நமதூரில் அமல் படுத்த வேண்டும்.
பெற்றோர்களுக்கு ஒரு கனிவான வேண்டுகோள்: உங்கள் பிள்ளைகளின் நலனுக்காக, மாணவர்களுக்கு விரைவாக உணவளித்து பள்ளி, கல்லுரிகளுக்கு முன் கூட்டியே அனுப்புங்கள். நன்றி..
தகவல்:அதிரை பிறை நிருபர் N.காலித் அகமது (இந்திய மாணவர் சங்கம்)

Close