முஸ்லிம் லீக் மாநாட்டில் தீர்மானம் மது விலக்கு அமல்படுத்த வேண்டும்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று
திருச்சியில் நடந்த முஸ்லிம் லீக் மாநாட்டில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.திருச்சி தென்னூர் உழவர் சந்தையில் இந்திய யூனியன் முஸ்லிம்
லீக் மாநில மாநாடு நேற்றுமுன்தினம் நடைபெற்றது. மாநாட்டில், பூரண மதுவிலக்கை
அமல்படுத்தி மக்களை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகளை கேட்டுக்கொள்வது, அரசியல் சாசன
அடிப்படை உரிமைகளுக்கும், மத சுதந்திரத்திற்கும் சமய சார்பற்ற ஜனநாயகம்
என்ற தத்துவத்திற்கும் எதிராக உள்ள 44 வது பிரிவை அரசியல் அமைப்பு சட்டத்திலிருந்து
நீக்க வேண்டும், முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடை உயர்த்த தமிழக அரசு
முன்வரவேண்டும் என்பது உள்ளிட்ட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கட்சியின் அகில
இந்திய தலைவரும், மத்திய இணை அமைச்சருமான அஹமது, மாநில தலைவர் காதர் மொய்தீன், மாநில பொருளாளர்
ஷாஜகான் ஆகி யோர் விழாவில் கலந்து கொண்டனர்.
Close