கருப்பு தினமான இன்று சுனாமி ஆழிப் பேரலை தாக்கியதின் 9ம் ஆண்டு நினைவு தினம்

சுனாமி என அழைக்கப்படும் பேரழை தாக்குதலில்
2,26,000 பேர் உயிரிழந்தனர். 20,00,00 

குடும்பங்கள் வீடுகளை இழந்தன. 9 ஆண்டு கடந்த
நிலையில் சுனாமியின் சீற்றம் ஏற்படுத்திய சோக வடுக்களை உலகமே திரும்பிப்
பார்க்கும் நினைவு தினம் இன்று. தாய்லாந்தில் 7,000 பேர், இந்தோனேசியாவில் 1,60,000 பேர், இலங்கையில் 35,000 பேர், அந்தமானில் 10,000 பேர், தமிழ்நாட்டில் 8,000 பேர் என தெற்காசியாவையே உலுக்கி எடுத்தது
ஆழிப்பேரலை. 

அன்று
ஒழித்த அழுகுரல்களை 9 ஆண்டுகள் அல்ல எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாது. சுனாமி  தாக்கியதின் 9ம் ஆண்டு நினைவு தினத்தால் சுனாமியால் பெரிதும் பாதிக்கப்பட்ட
நாகப்பட்டினம் கடற்கரையில் உயிரிழந்தவர்களின் நினைவாக இன்று அஞ்சலி செலுத்தப்பட
உள்ளது. சென்னையிலும் மெரினா கடற்கரையில் சுனாமி நினைவஞ்சலி
நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதேப் போன்று தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும்
சுனாமியால் இறந்தவர்களுக்கு இரங்கல் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

Close