அதிரை பெற்றோர்களே உஷார்! காலம் கடந்துகொண்டே இருக்கிறது!

 

மாணவர்களை அதிக மதிப்பெண் எடுக்க வைப்பதில் பெற்றோரின் பங்கு மிக
முக்கியமானது. ஏனெனில் மாணவர்கள் வயது குறைந்தவர்கள், பெற்றோர்கள்தான் மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். எனவே தங்களுடைய பிள்ளைகள் சரியா படிக்கின்றதா என கண்கானிக்க வேண்டும். படித்ததை உங்களிடம், பார்க்காமல்  எழுதி காண்பிக்க சொல்ல வேண்டும். குறிப்பாக ஜனவரி முதல் ஏப்ரல் வரை படிப்பை தவிர மற்றதின் பக்கம் கவனத்தை திரும்பிவிடாமல் பார்த்துகொள்ள வேண்டும்.

1. டிவி பார்ப்பதை (குறைந்தது ஜனவரி முதல் ஏப்ரல் வரை) தவிற்கவும்,
நீங்கள் டிவி பார்க்காமல் இருந்தால்தான் உங்கள் பிள்ளைகளும் டிவி
பார்க்காமல் இருப்பார்கள் கேபிள் இணைப்பை கட்டாயம் துண்டித்துவிடவும்.

2. மாணவ மாணவிகளிடம் இருந்து கட்டாயம் செல்போனை பறித்துவிடவும். தேர்வு முடியும் வரை செல்போனை தரவேண்டாம். (பெண் பிள்ளைகளுக்கு தேர்வு முடிந்தாலும் செல்போனை தர வேண்டாம்). படிப்பில் சிறந்து விளங்குவதற்கும் செல்போனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

3. வெளியில் விளையாட அனுமதிக்காதீர்கள், கணினியில் (Computer -ல்)
படிப்பதற்கு தவிற வேரெதற்கும் பயன்படுத்த கொடுக்காதீர்கள்.
கம்ப்யூட்டரில் பாட்டு கேட்பது, சினிமா பார்பது, கேம் விளையாடுவது
போன்றவற்றிற்கு முழுமையாக தடை போடுங்கள்.4. மாணவர்களின் உடல் நலத்தில் கவனம் செலுத்தவும் நல்ல சத்துள்ள உணவுகளை கொடுக்கவும். பிள்ளைகளை திட்ட வேண்டாம் சபிக்க வேண்டாம், அன்பாக அவர்களுடைய தவறை சுட்டிகாட்டவும்.

5. பிள்ளைகளை வெறுமனே படி படி என்பதைவிட படிப்பதற்கான சூழ் நிலையை ஏற்படுத்திகொடுங்கள். படிப்பதை கண்கானியுங்கள். அதிகமாக மதிப்பெண் எடுத்தால் பரிசு தருவதாக சொல்லுங்கள். திட்ட மிடுதல், படித்தை நினைவில் நிறுத்துதல், பார்க்காமல் எழுதி பார்த்தல் போன்றவற்றில் உதவுங்கள்.

6. கல்வி கற்பது மார்க்க கடமை என்பதை புரியவையுங்கள். இஸ்லாம் கல்விக்கு Bவழங்கிய முக்கியத்துவத்தை, கல்வி கற்பதினால் இம்மையிலும் மறுமையிலும் கிடைக்கும் நன்மையை எடுத்துகூறுங்கள்.

7. மாணவர்கள் குறைவான மதிப்பெண் எடுத்தால், நீங்கள்தான் அதிகமாக பணத்தை கொடுத்து கல்லூரியில் சேர்க்க வேண்டும். உங்கள் பிள்ளை நல்ல மதிப்பெண் எடுத்தால் மிக குறைவான பணத்தில் கல்லூரியில் சேர்க்கலாம். எனவே உங்கள் பிள்ளை அதிக மதிப்பெண் எடுப்பது உங்களுக்குத்தான் மிக முக்கியம். ஏனெனில் கல்வி கட்டணம் கட்டுவது நீங்கள்தான். அதை கவனத்தில் கொண்டு விழிப்புணர்வுடன் செயல்படுங்கள்.

8. உங்கள்வீட்டு பொருளாதார சூழ்நிலையையும், கல்வியின் அவசியத்தையும் தொடர்ந்து வலியுறுத்துங்கள். தேர்வுகாலம் முடியும் வரை உங்களுடைய முழுகவனத்தையும் உங்கள் பிள்ளைகளின் மீது வையுங்கள். உங்கள் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காக தொடர்ந்து அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொண்டுஇருங்கள்.


            தற்போது தேர்வுகாலம், அரையாண்டுத் தேர்வுகள் முடியும்
நிலையில் 10 ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு தேர்வுகள் என பல்வேறு தேர்வுகள்
மாணவ மாணவிகளை நெருங்கி கொண்டு இருக்கின்றன. அரசு பொது தேர்வுகளில் நல்ல மதிப்பெண் எடுத்தால் தான், நாம் நினைக்கும் படிப்பை குறைவான செலவில் படித்து, நாம் நினைத்த வேலைக்கு போக முடியும். இந்தியாவை பொருத்தவரை நாம் எடுக்கும் மதிப்பெண் தான் நம்முடைய அறிவு திறனை தீர்மானிக்கும் அளவுகோலாக இருக்கின்றது. எனவே நாம் நினைக்கும் துறையில் முன்னேற அதிகமாக மதிப்பெண்
எடுப்பது கட்டாயமாகின்றது.

இந்த முறை அரசுதேர்வு  விடைத்தாள்களில் அரசு மாற்றம் செய்துள்ளது.
முன்னர் இருந்தது போல் இல்லாமல், விடைத்தாள்கள் 40 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகமாக அதிலும் முன் பக்கத்தில் மாணவ/ மாணவியின் புகைப்படம் அச்சிட்டதாக காணப்படும். ஆகவே எந்தவித குற்றச்செயல்களுக்கும் வாய்ப்பு இல்லை என்பதை முதலில் ஒவ்வொரு மாணவ/ மாணவியரும் அறியவும்.

அன்பான 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு  மாணவ மணிகளே!

நாம்  L K G முதல் இன்று வர படித்த படிப்பிற்கான முழு பலனும் இனிமேல்
வரப்போகும் அரசு  தேர்வில்தான் உள்ளது என்பதை முதலில் மனதில் வையுங்கள்.

 இதிலும் ஒரு சில மாணவ மணிகள் இந்த மாதம்வரையிலும் ஏனோ தானோ என இருந்திருக்கலாம். அதைப்பற்றி அவர்கள் கவலை படாமல், இருக்கும் காலத்தை அதாவது வரும் 60 (ஜனவரி- பிப்ரவரி)  நாட்களை நன்றாக பயன்படுத்தினால் நீங்கள் வரப்போகும் தேர்வில் வெற்றி பெறுவதுடன் அதிக மதிப்பெண்ணும் எடுக்கலாம்.

குறிப்பாக இந்த 60-70 நாட்களில்  புதிய பாடங்களாக இருந்தாலும் கிழ்கண்ட
அறிவுரைகளை பின்பற்றி நன்றாக படியுங்கள். மேலும் அரசு நடத்தும் ஒவ்வொரு பாட தேர்விற்கும் இடையில் குறைந்தது 2 நாட்கள் இடைவெளி
கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நாட்களை வீண் விளையாட்டுகளில் ஈடுபடாமல் நன்றாக படித்ததை திருப்பி பார்ப்பதற்குப்  பயன் படுத்திக் கொள்ளுங்கள்.

அதிக மதிப்பெண் எடுக்க என்ன செய்ய வேண்டும்

1) நம்பிக்கை : முதலில் நாம் அதிகமாக மதிப்பெண் எடுப்போம், என்ற
நம்பிக்கையை வளர்த்துகொள்ள வேண்டும் ஒரு காரியம் நம்மால் இயலாது என நினைக்கலாம்,ஆனால் நம்மை படைத்த இறைவனால் அது இயலும்.

“(நபியே!) அல்லாஹ்வையே நீர் முற்றிலும் நம்புவீராக அல்லாஹ்வே (உமக்குப்)
பாதுகாவலனாக இருக்கப் போதுமானவன்”. (அல் குர் ஆன் : 33:3 ).2) ஆர்வம்: படிக்கும் போது ஆர்வத்துடன் படிக்க வேண்டும்.  படிக்கும் போது
“இந்த பாடம் கடினமான பாடம்” என நீங்கள் நினைப்பது தான் உங்களுடைய
ஆர்வத்தை குறைக்கின்றது,”3) மறதி: படித்த‌து தேர்வறைக்கு சென்றவுடன் எல்லாம் மறந்துவிட்டது, என பல மாணவர்கள் கூறுவார்கள். இதை மறதி என்று கூற முடியாது,  நம்முடைய ஆர்வமின்மையை இது காட்டுகின்றது. சினிமா பாடல் மறப்பதில்லை, ஆனால் படிக்கும் பாடம் மறக்கின்றது, கவனமாக படியுங்கள்.  இரவு படிப்பை (Night study after 10′ o clock) தவிர்த்துவிடுங்கள், வரும் ஜனவரி முதல் பிப்ரவரி, மார்ச் மாத நாட்களில் அல்லாஹ்வின் அருள் இறங்கும் நேரமான அதிகாலையில் எழுந்து (Wakeup early 4 ‘o clock) படியுங்கள். படித்த‌தை அடிக்கடி எழுதி பாருங்கள். ஆர்வமாக படித்தால் எதுவும் மறக்காது.4) படிக்கும் முறை  : பொதுவாக நாம் தேர்விற்காக  படிக்கும் போது வெறுமனே புத்தகத்தை புரட்டி கொண்டிருந்தால் படித்தது நினைவில் நிற்காது, படிக்கும் போது வெள்ளை தாள், பேனா அல்லது பென்சில் வைத்து கொண்டு, படிக்கும் ஒவ்வொறு பக்கத்தையும் எழுதி பார்க்க வேண்டும், ஒரு பக்கமோ அல்லது ஒரு பகுதியோ (chapter or Question )படித்து முடித்த பிறகு உடனே அடுத்த பகுதிக்கு போகாமல் இதுவரை படித்ததை கண்டிப்பாக பார்க்காமல் எழுதி பார்க்க வேண்டும், இப்படி செய்தால் படித்தது மறக்காமல் இருக்கும்.5) நாம் நமக்காக படிக்கின்றோம்: நீங்கள் படிப்பது உங்களுக்காக
படிக்கின்றீர்கள், நீங்கள் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்தால் உங்கள்
எதிர்கால வாழ்க்கைதான் வீணாபோகும், இதில் ஆசிரியருக்கோ, பெற்றோருக்கோ எந்த நஷ்டமும் இல்லை. எனவே நான் படிப்பது என்னுடைய நலனுக்காதான், என்பதை நீங்கள் உணர வேண்டும்.6) கடின உழைப்பு : அல்லாஹ்விடம் நாம் பிரார்த்தனை செய்துவிட்டு
கவனத்துடனும் படிக்க வேண்டும், கடுமையாக உழைக்க வேண்டும்.7) குறிபிட்ட பாடத்திற்கு அதிக கவனம் செலுத்தி படிப்பது :  குறிப்பிட்ட
பாடத்தில் அதிக கவனம் செலுத்தி படிக்க வேண்டும். உங்கள் ஆசிரியர்
கொடுத்த( Blueprint of Question paper ) அதிக மதிப்பெண் கிடைக்கும்
பாடங்களை முதலில் படிக்க வேண்டும்.8) பிரார்த்தனை : படிக்கும் முன் நாம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து
விட்டு படிக்க வேண்டும், நம் பெற்றோர்களையும் நமக்காக பிரார்த்தனை செய்ய சொல்ல வேண்டும், எதாவது பாடம் கடினமாக இருந்தால் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

“என் இறைவா! எனக்குக் கல்வியை அதிகப்படுத்து எனக் கூறுவீராக!” (அல்-குர்
ஆன் 20 : 114)9) படிக்கும் போதே முக்கியமானவைகளை தனியாக எழுதி வைத்துக்கொள்ள வேண்டும், பின்னர் நாம் பாடத்தை Revise -பன்னுவதற்கு இது எளிதாக இருக்கும்.நமது முஸ்லீம் சமுதாயம் கல்வியில், அவர்கள் விரும்பும் துறைகளிலும்
சிறந்து விளங்க அல்லாஹ்விடம் பிராத்திப்போமாக!.


Regards
Sahabudeen (COM.SCI TEACHER)
KHADIR MOHIDEEN BOYS HR, SEC,SCHOOL

Close