அம்மான்னா சும்மா இல்லடா! யூ டியூபில் வைரல் ஹிட்டாகி அசத்தும் க்யூட் விளம்பரம்!

“பெருநகரங்களில் வாழும் மகன்களுக்கு மட்டுமே தெரியும் அம்மா செய்யும் சாப்பாடு எவ்வளவு ருசியானது என்று.”

எதிர்காலத்தில் குடும்ப பாரத்தை சுமப்பதற்காக வேறு ஒரு ஊரில் தங்கி படிப்பது, தங்கச்சியை கல்யாணம் செய்து கொடுப்பதற்காக வேலை பார்ப்பது, என்று பல்வேறு காரணங்களுக்காக அம்மாவைப் பிரிந்து வாழும் மகன்களுக்கு, தினசரி யாரோ செய்த சாப்பாட்டை சாப்பிடும் போது, அம்மா ஆசையோடு செய்து தரும் ருசியான சாப்பாடுதான் நினைவுக்கு வரும்.

அப்படிப்பட்டவர்களுக்கு அம்மா கையால் செய்த சாப்பாடு கிடைத்தால் எப்படி இருக்கும்? என்ற எண்ணத்தின் அடிப்படையில் ஒரு நிறுவனம் விளம்பரம் ஒன்றை உருவாக்கியுள்ளது. உடனே இது எதுவும் கொரியர் கம்பெனி விளம்பரம் என்று நினைத்து கலவரப்பட வேண்டாம். இது அதுக்கும் மேல, அம்மாக்களையே ஆள்மாறாட்டம் செய்ய வைக்கும் Mothers Exchange Programme.

சென்னையில் படிக்கும் இந்தி பையனின் அம்மா ஜெய்பூரிலும், ஜெய்பூரில் படிக்கும் தமிழ் பையனின் அம்மா சென்னையிலும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் தங்களுக்குள் அறிமுகமாகி, வட இந்திய சமையலும் தென் இந்திய சமையலும் பின்னிப் பிணைந்து, அம்மாக்களுக்கிடையேயான கெமிஸ்ட்ரி தாறு மாறாக எகிரி, கடைசியில் பசங்களுக்கு நல்ல சாப்பாடு கிடைத்ததா என்பதை, “ஆல் ஓவர் தி வேர்ல்டு அம்மான்னா அன்புதான்” என்ற எமோஷனல் கிளைமாக்சோடு, ஒரு மினி சினிமாவையே எடுத்திருக்கிறார்கள் பார்டியூன் நிறுவனத்தினர். 

Best Ads என்ற நிறுவனம் இந்த விளம்பரத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் போஸ்ட் செய்த இரண்டே நாட்களில் 18 ஆயிரம் பேர் இந்த வீடியோவை ஷேர் செய்துள்ளனர். பலர் இந்த வீடியோவை பார்த்து சிரித்தும் அழுதும் வருகின்றனர்….

Advertisement

Close