Adiraipirai.in
posts

அதிரை இளைஞர்களின் சிறப்பான முயர்ச்சியில் உருவான புதிய பூங்கா…


அதிரை ஆலடித்தெரு முகைதீன்
ஜும்மா மஸ்ஜித் அருகில் செக்கடிக் குள‌த்து மேட்டில் அதிரை இளைஞர்களால் புதிதாக
ஒரு பூங்கா உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த பூங்கா சுற்றிலும் வேலி அடைக்கப்பட்டு
உள்ளே விதவிதமான அழகு செடிகளால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. செக்கடிக் குளத்து
காற்றும் பூங்காவில் உள்ள ரம்மியமான இயற்க்கை சூழலும் அங்கு வருபவர்களை மனம் குளிர
செய்யும் வண்ணம் உள்ளது.
சில நாட்களுக்கு முன்னர்
வெறும் இரண்டு கற்களுடன் மக்கள் அமர்வதற்க்காக இருந்த இந்த இடம் தற்பொழுது அதிரை
இளைஞர்களின் கடும் முயர்ச்சியில் வெகு சிறப்பாக  பூங்காவாக‌ அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பூங்காவில் இன்னும்
நிறைய வசதிகள் செய்யவுள்ளதாக இதை வடிவமைத்த இளைஞர்கள் கூறுகின்றனர். இளைஞர்களின்
முயர்ச்சிக்கு அதிரை பிறையின் பாராட்டுக்கள்.