அதிரை TNTJ ஷார்ஜா கிளையின் ஒருங்கிணைப்புக் கூட்டம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்..
ஷார்ஜா அதிரை TNTJ கிளையின் ஒருங்கிணைப்பு கூட்டம் 13.12.2013 வெள்ளிக் கிழமையன்று அஸர் தொழுகைக்குப் பிறகு 4.30 மணியளவில் ஷார்ஜா சிட்டி TNTJ மர்கஸில் நடைபெற்றது.  
அதிரை ஷார்ஜா TNTJ கிளையின் புதிய நிர்வாகத்தின் திட்டங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.  அதனையடுத்து பல புதிய முக்கிய தீர்மானங்களும், வருகின்ற ஜனவரி 28 சிறைநிறைப்பு போராட்டத்திற்கான செயல்திட்டங்கள் பற்றியும் பேசப்பட்டன. கலந்துகொண்ட சகோதரர்கள் நம்மூரில் தஃவா வளர்ச்சிகளுக்கான நல்ல பல ஆலோசனைகளும் வழங்கினார்கள்.

ஜசாக்கல்லாஹ்..
courtesy:adiraitntj.com
Close