அதிரையில் கொத்து கொத்தாக மீன்களுடன் கரை திரும்பிய மீனவர்கள்..!

அதிரை பகுதி மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து விட்டு நேற்று
கரைக்கு திரும்பினர்.


வங்கக்கடலில் ஏற்பட்ட
காற்றழுத்த தாழ்வு நிலை யால், மழை, கடல் சீற்றம் போன்றவை இருந்ததால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரித்தது.

இதனையடுத்து அதிரை, ஏரிப்புறக்கரை, கீழத்தோட் டம், மறவக்காடு ஆகிய
பகுதிகளில் உள்ள பைபர் படகுகள் கடந்த 4 தினங்களாக கடலு க்கு
செல்லாமல் இருந்தன. 

இந்நிலையில் காற்றழுத்தம் அதிரைக்கும், பாம்பனுக்கும் இடையே
கரையை கடந்ததாலும், கடலில் சீற்றம் இல்லாததாலும் நேற்று முன் தினம் இரவு மீனவர்கள் கடலுக்கு
சென்றனர். பின்னர் கடலுக்கு சென்ற மீனவர்கள் நேற்று காலை மீன் பிடித்து விட்டு
கரைக்கு திரும்பினர். 
பல நாட்களாக மீன் பிடிக்க செல்லாத நிலையில்,  தற்போது அனைத்து
படகுகளிலும் மீன்கள், இறால்கள், நண்டுகள் அகப்பட்டன என்று மீனவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
courtesy:dinakaran
Close