அமைச்சர் வைத்திலிங்கம் சென்ற கார் விபத்து..!

           

       சேலம் வாழப்பாடியில், ஏற்காடு இடைத்தேர்தல் வெற்றி மற்றும் நன்றி அறிவிப்பு கூட்டத்திற்கு வந்த அமைச்சர் வைத்திலிங்கத்தின் கார் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர். 

இதில் பங்கேற்க வீட்டு வசதித்துறை அமைச்சர் வைத்திலிங்கம் தஞ்சாவூரில் இருந்து வாழப்பாடிக்கு காரில் வந்து கொண்டிருந்தார். இரவு 7 மணிக்கு சேலம் மாவட்ட எல்லையான தம்மம்பட்டி அருகே வந்தபோது சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் அமைச்சரின் கார் தலை குப்புற கவிழ்ந்தது. 

இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து காரில் இருந்தவர்களை மீட்டனர். இதில் அமைச்சர் உட்பட 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் வேறொரு காரில் ஏறிச் சென்று அமைச்சர் வைத்திலிங்கம் உட்பட 6 பேர் வாழப்பாடியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

INFO : KHAALID AHAMED 

thanks : தினகரன் நாளிதழ் .

Close