அதிரையில் பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தம்..!

இன்று வங்கக் கடலில்  நிலைக்கொண்டுள்ள புயல் கரையைக் கடப்பதால் தமிழகத்தில் பெரும்பாலான கடலோர பகுதிகளில் இன்று காலையிலிருந்து மழை விடாமல் பெய்து வருகிறது. இதற்க்கு அதிரை மட்டும் விதிவிலக்கு அல்ல. இதனால் காலையில் இருந்து நமதூரிலும் மழை லேசா தூரிக் கொண்டே உள்ளது. 

எனவே அவ்வப்போது மின் வினியோகமும் நிறுத்தப்பட்டது. தற்பொழுது நமதூரில் காற்று அதிகம் வீசி மழை பெய்து வருவதால் சில தெருக்களில் உள்ள ட்ரான்ஸ்பார்மர்களில் தீ பொரி வந்தவாறு உள்ளது.

 இதனால் அசம்பாவிதத்தை தடுப்பதற்க்காக இன்று இரவு 7:15 மணியில் இருந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தற்பொழுதும் மின்சாரம் இல்லை. இதனை சிறமமாக என்னாமல் பாதுகாப்புக்காக என்று என்னிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Close