அதிரை அருகே பூட்டிக் கிடந்த வீட்டில் நகை கொள்ளை, திருடர்கள் கைவரிசை..

அதிரை அருகே உள்ள கரிக்காடு
என்னும் ஊரில் வசித்து வருபவர் ராமமூர்த்தி தாமரங்கோட்டையில் தபால்காரராக பணி புரிந்து
வருகிறார். இவரது மகள் தஞ்சாவூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிரசவத்திற்க்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதனால் ராமமூர்த்தியும் அவரது குடும்பத்தினரும் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தோடு
தஞ்சை சென்றுவிட்டனர்.
இந்நிலையில் நேற்று முந்தினம்
இரவு வீட்டு கதவை உடைத்து உள்லே புகுந்த மரம நபர்கள் அங்கிருந்த 5 பவுன் நகை, 200 கிராம் வெள்ளி
பொருட்களை திருடி சென்றுவிட்டனர். இது பற்றி பட்டுக்கோட்டை போலீஸில் ராமமூர்த்தி புகார்
செய்தார். இதுகுறித்து குற்றப் பிரிவு எஸ்.ஐ. அமிர்தாலிங்கம் வழக்கு பதிந்து குற்றவாளிகளை
தெடி வருகின்றார்.

முன்பு நாம் அதிரை அருகே இதே கரிக்காடு என்னும் ஊரில் நடந்த திருட்டு முயற்ச்சியை ஆராய்ந்து நம் தளத்தில் பதிந்துள்ளோம்..
அதிரை மற்றும் பட்டுக்கோட்டை பகுதிகளில் நடமாடும் மர்ம பெண்கள், எச்சரிக்கை!

Read more: https://adiraipirai.blogspot.com/2013/11/blog-post_4515.html#ixzz2n991klhB

Close