சிங்கப்பூரில் திடீர் பதற்றம் லிட்டில் இந்தியாவில் மோதல் போலீஸ் கார்கள் எரிப்பு

சிங்கப்பூரில் உள்ள லிட்டில் இந்தியா பகுதியில் தெற்கு ஆசிய நாடுகளை 
சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். பெரும்பாலும் தமிழகம் உள்பட இந்தியாவின் பல மாநிலங்களை சேர்ந்த மக்கள் பல ஆண்டுகளாக இங்கு வசிப்பதால், லிட்டில் இந்தியா என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் சட்ட விதிகளுக்கு கட்டுப்பட்டு மக்கள் நடக்கின்றனர். இங்கு போராட்டங்கள், ஊர்வலம் நடப்பது அரிதிலும் அரிது. இந்நிலையில், தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் லிட்டில் இந்தியா பகுதியில் நேற்றிரவு திடீரென தெற்கு ஆசிய மக்களுக்குள் மோதல் ஏற்பட்டது.
Close