அவசரத்திற்க்கு உதவாத அதிரை கனரா வங்கி!

அதிரை கனரா வங்கி கடந்த பல ஆண்டுகளுக்கு முன் நமதூரில் துவங்கப்பட்டு துரித மற்றும் நல்ல சேவையால் பல அதிரையர்களை வாடிக்கையாளர்களாக ஆக்கியது. இதனால் நமதூர் மக்கள் விரும்பி கணக்கு துவங்கும் வங்கியாக இந்த வங்கி உள்ளது. இது ஒரு புறம் இருந்தாலும் தற்போதைய நவீன காலத்தில் கால் கடுக்க காசோலை எழுதி பணம் பெறுவது அரிதிலும் அரியதாகி விட்டது. எனவே பணம் எடுக்க நினைப்பவர்களின் அடுத்த சாய்ஸ் ATM. கார்டை சொருகி ரகசிய எண்ணை அடித்து எவ்வளவு பணம் என்று சொன்னால் போதும் அடுத்த நிமிடன் பணம் நமது கையில்.

இப்படி எளிமையான முறையில் பணம் எடுக்க முடிவதால் பலரும் ATM ஐ நாடி செல்கின்றனர். இப்படி இருக்க நமதூர் கனரா வங்கியில் ATM மையம் திறந்திருப்பது அபூர்வமாக உள்ளது. நாள்தோறும் லட்சக்கணக்கில் பணம் பதிவர்தனை நடைபெறும் அதிரையில் இந்த நிலை தொடர்வதால் அதிரை கனரா வங்கியின் மீது மக்களின் அதிர்ப்தி ஏற்பட்டுள்ளது.

படம்: யாசின் 
அன்சாரி

Advertisement

Close