Adirai pirai
posts

கப்ரில் புதைக்கப்பட்டு 3 மணி நேரத்திற்க்கு பிறகு தோண்டி எடுக்கப்பட்ட 18 வயது இளைஞனின் உடல்

கப்ரின் அதாபு – ஓமான் நாட்டில் நடந்த உண்மை சம்பவம்

இந்தப் புகைப்படம் ஓமன் நாட்டிலுள்ள ஒரு மருத்துவமனையில் இறந்த 18 வயது இளைஞனுடையது… இவனுடைய தந்தையின் வற்புறுத்தலின் பேரில் 3 மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் கபுரில் இருந்து இந்த இளைஞனின் மையத்தை corpse தோண்டி எடுக்கப்பட்டது.

இந்த இளைஞன் மருத்துவமனையில் இறந்தபிறகு அதேநாளில் 3 மணி நேரத்தில் இஸ்லாமிய சடங்குகள்படி அடக்கப்பட்டது. ஆனால் மருத்துவரின் சிகிச்சையின் மீது சந்தேகப்பட்ட அவரது தந்தை தனது மகன் இறந்ததற்கான உண்மையான காரணம் அறிய
ஆசைப்பட்டதால் அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டது

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் தோண்டி எடுப்பதற்காக அனைவரும் செல்லுகின்றனர்.3 மணி நேரத்திற்கு முன்பு சடங்குகள் செய்து விட்டுச் திரும்பிய கால்கள் மறுபடியும் அக்குழியை நோக்கிச் செல்லுகின்றது.

சற்று முன்பு புதைக்கப்பட்ட இடம் என்பதால் எளிதாக மணலைத் தோண்ட முடிகின்றது. மூடிய குழிகள் மெல்ல மெல்ல தோண்டப்பட்டு வருகின்றது. முழுவதுமாய் தோண்டி அந்த இளைஞனின் உடல் வெளியே எடுக்கப்படுகின்றது. சிலருக்கு மயக்கம்
வராத குறை. சிலர் முகம் சுளிக்கின்றனர்.

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அந்த உடலை கண்டு பெரும் அதிர்ச்சி அடைகின்றனர் அவரது தந்தையால் அந்த உடலை காண சகிக்க முடியவில்லை. சற்று முன் புதைக்கபட்டதாக அந்த உடல் தெரியவில்லை.

3 மணி நேரத்தில் அவரது உடலில் பயங்கர மாற்றம் ஏற்பட்டுளள்ளதை அனைவரும் திகிலோடு கவனிக்கின்றனர். அந்த உடல் ஒரு விதமான சாம்பல் நிறமாக காட்சி அளிக்கின்றது. 18 வயதான அந்த இளைஞனின் உடல் ஒரு முதியவரின் உடல் போல தோற்றமளிப்பதைக்கண்டு அனைவருக்கும் பயம் கலந்த ஆச்சர்யம்.

சுமார் 1000 பேர் சேர்ந்து அவரை குழிக்குள் வைத்து அடித்துப்போட்ட மாதிரி மிகவும் சேதமடைந்து கை மற்றும் கால்களில் எலும்புகள் எல்லாம் நொறுக்கப்பட்டு இடுப்புப் பகுதியில் யாரோ நெருக்கியயது போல இடுப்பு பகுதிகள் ஒடிந்து

இரத்தங்கள் வெளியே முகத்தில் சிதறி கோரமாக காட்சி அளித்தது.உடல் முழுவதும் உடலின் நிறம் முற்றிலுமாய் மங்கி காட்சி அளித்தது.

அனைவருக்கும் ஆச்சர்யம் என்னவென்றால் கண்கள் மூடியபடி அடக்கப்பட்ட அவரின் விழிகள் முற்றிலுமாய் திறக்கப்பட்டு எதையோ பார்த்து பயந்து போய் வலி தாங்க முடியாமல் உறைந்து போனதுபோல காட்சி அளித்தது. உடலில் உள்ள இரத்தம் வெளியே வந்து மிகுந்த சித்திரவதைக்கு உட்பட்டவனைப் போல காட்சி அளித்தது.

இரண்டு பக்கம் வைக்கப்பட்டுள்ள இயந்திரங்களால் மனித உடலை நசுக்கினால் எப்படி சிதையுதோ அந்த அளவிற்கு சிதைவுகளின் கோரம் இருந்தது.புதைத்து 3 மணிநேரத்திற்குள் இப்படி மோசமாக உடல் சிதைக்கப்பட்டுப் போனதன் காரணம்

தெரியாமல் அனைவரும் திகிலடைந்து போய் இருந்தனர்.

உறவினர்கள் அந்தப் உடலை எடுத்து இஸ்லாமிய மருத்துவ ஆராய்ச்சியாளர்களிடம் ஒப்படைத்து ஆராயச் சொன்னபொழுது அவர்களின் விளக்கப்படி இந்த உடலானது குழிக்குள் மிகுந்த சித்திரவதைக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளது என்றும் தீய

வழியில் நடப்பவர்கள் குழிக்குள் வேதனைப்படுத்தப்படுவார்கள் என்று அல்லாஹ் மற்றும் அவனது தூதுவரான நபிகள் நாயகத்தின் ஏற்கனவே கூறப்பட்டுள்ள எச்சரிக்கைதான் என்றும் விளக்கமளித்தனர்..

திகிலில் இருந்து உறையாமல் பயத்துடன் இருந்த அவனது தந்தையிடம் கேட்டபொழுது அவர் தனது மகன் தீய நடவடிக்கைகளில் ஈடுபட்டான் என்பதையும் தொழுகையை ஒழுங்காக பேணி தொழுபவன் இல்லை என்றும் வாழ்க்கையில் சரியான

வழியில் அவன் செல்லவில்லை என்றும் விளக்கமளித்தார்.

அல்லாஹ்வின் பாதையில் இறந்தவனைத்தவிர மற்ற அனைவருக்கும் கப்ரு வேதனை உண்டு. கியாமத் நாளுக்கு ( இறுதி நாள் ) முன்பு வேதனைகள் வெளிக்கொணரப்பட்ட முதல் சம்பவம் இதுவாகும்.

நபி (ஸல்) கூறினார்கள்: மனிதன் மன்னறையில் வைக்கப்பட்டு அவனுடைய நண்பர்கள் அவனை விட்டும் திரும்பி செல்லும் போது அவன் அவர்களின் செருப்பின் ஓசையை கேட்பான். இரு மலக்குகள் அவனை உட்காரவைத்து (ஒரு மனிதரைக் காண்பித்து) இவர் யார்? இம் மனிதரை பற்றி நீ என்ன கூறி கொண்டு இருந்தாய்? என அவனிடம் கேட்பார்கள்.

ஒரு முஃமின், இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனின் திருத்தூதரும் ஆவார் என நான் சாட்சி கூறுகிறேன் என்று கூறுவான். நரகத்தின் உன் இருப்பிடத்தை பார் இதற்க்கு பகறமாக உனக்கு சுவர்க்கத்தில் ஒரு இருப்பிடத்தை அல்லாஹ் ஏற்படுத்தி விட்டான் என அவனிடம் கூறப்படும்.. அவ்விரண்டையும் அவன் பார்ப்பான்..

ஒரு காஃபிர் அல்லது நயவன்ஞ்சகனிடம் இம் மனிதரை பற்றி நீ என்ன கூறி கொண்டு இருந்தாய்? என அவனிடம் கேட்பார்கள். அதற்க்கவன், எனக்கு தெரியாது மக்கள் கூறியதை கூறி கொண்டு இருந்தேன் என்று கூறுவான். அப்போது அவனிடம் நீ அவரை அறிந்து கொள்ளவும் இல்லை, பின் பற்றவுமில்லை என கூறப்படும். பிறகு அவன் மீது இரும்பு சம்மட்டியால் ஓங்கி அடிக்கப்படும். அப்போது அவன் சப்தமிடுவான். அதை மனிதர்களையும் ஜின்களையும் தவிர அனைவரும் கேட்பார்கள். (நயஸி)

மன்னறையில் உடலுக்கு மீண்டும் உயிர் கொடுக்கப்படும் என்பது உலகில் மனித அறிவு விளங்கிக் கொள்ள முடியாத மறுமை விஸயமாகும். மனிதன் மன்னறையில் நர்பக்கியத்திற்குத் தகுதியானவனாக இருந்தால் நாற்பக்கியம் வழங்கப்படுவான். வேதனைக்குத் தகுதியானவனாக இருந்தால் வேதனை செய்யப்படுவன் என்ற விஸயத்தில் முஸ்லிம்கள் ஏக மனதாக உறுதி கொண்டுள்ளார்கள். அல்லாஹ் கூறுகிறான்: காலையிலும் மாலையிலும் நரக நெருப்பு முன் கொண்டு வரப்படுவார்கள். மேலும் மறுமை நாள் வந்துவிடும் போது ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை கடினமான வேதனையில் புகுத்துங்கள் என கூறப்படும்.{40:46} மன்னரை வேதனையிலிருந்து அல்லாஹவிடம் பாதுகாப்பு தேடுங்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள்.

தெளிவான அறிவு மன்னரை வேதனையை மறுக்காது. காரணம் இதுபோன்ற நிலையை மனிதன் தன் வாழ்வில் பார்க்கத்தான் செய்கிறான். உதாரணமாக தூங்கக்கூடிய ஒருவன் கனவில் கடினமாக வேதனை செய்யப்படுவதாக உணர்ந்து சப்தமிடுகிறான், உதவியும் தேடுகிறான். ஆனால் அவனுக்கு அருகில் இருப்பவன் இதை உணர்வதில்லை. உயிரோடு உறங்கக்கூடியவனுடைய வேதனையையே அருகில் இருப்பவன் உணரமுடியவில்லை என்பது போல மாரனித்டவரின் மன்னரை வேதனையை உயிருள்ளவன் நேரடியாக உணரமுடியாது. மன்னரை வேதனை உடலுக்கும் உயிருக்கும் அளிக்கப்படுவதேயாகும்.

நபி (ஸல்) கூறினார்கள்: மன்னறை மறுமையின் தங்குமிடங்களில் ஆரம்ப இடமாகும். இதிலிருந்து ஒருவன் ஈடேற்றம் பெற்று விட்டால் இதர்க்கு பின் உள்ளவை இதை விட எளிதனாதாகும். இதிலிருந்து ஈடேற்றம் பெறாவிட்டால் இதற்க்குப் பின் உள்ளவை இதை விட மிகக் கடினமாணதாகும். {திர்மீதி}

எனவே மண்ணறை வேதனையிலிருந்து முஸ்லிம்கள் பாதுகாவல் தேடுவது அவசியமாகும். குறிப்பாக தொழுகை முடிந்தபின் இறைவனிடம் அதை விட்டும் பாதுகாவல் தேடுவது அவசியமாகும்.

இவ்வாறே நரகத்திலும் மண்ணறைலும் வேதனை செய்யப்படுவதன் முதற் காரணமான பாவங்களிலிருந்து தூரமாகுவதற்க்கு முயல வேண்டும். இதற்கு மன்னறை வேதனை என சொல்லப்படுவதற்குரிய காரணம் பெரும்பாலும் மனிதர்கள் மன்னறையில் தான் அடக்கம் செய்யப்படுகிறார்கள் என்பதாகும். ஆனால் தண்ணீரில் மூழ்கியவர்கள், நெருப்பில் எரிந்துபோனவர்கள், மிருகங்கலால் தின்னப்பட்டவர்கள், இன்னும் இது போன்றவர்கள் திரை மறைவான பர்ஸக் எனும் உலகில் வேதனை செய்யப்படுவார்கள்.

மண்ணறை வேதனை என்பது இரும்பாலான அல்லது வேறு ஏதாவது சம்மட்டியால் அடிக்கப்படுவது அல்லது அந்த மையத்தின் விலா எலும்புகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணையும் அளவிர்க்கு நெருக்கப்படுவது, மண்ணறையில் இருள் நிரப்பப்படுவது, நெருப்பாலான விரிப்பு விரிக்கப் படுவது, நரகிலிருந்து ஒரு வாசல் திறந்து வைக்கப்படுவது, அவனின் தீய செயல்கள் துர்நாற்றமுள்ள அருவருப்பான முகமுடைய மனிதன் போன்று உருவெடுத்து அவனுடன் அம்ர்ந்திருப்பது. இப்படிப் பல வகைகள் உள்ளன.

அடக்கம் செய்யப்பட்ட மனிதன் காஃபிராகவோ நயவன்ஞ்சகனாகவோ இருந்தால் வேதனை நிரந்தரமாக இருக்கும்.. பாவியன முஃமினாகா இருந்தால் அவனது பாவம் அளவிர்க்கு வேதனை மாறுபடும். சிலசமயம் வேதனை நிறுத்தப்படும். ஆனால் முஃமின், மண்ணறையில் அருள் பலிக்கப்படுவான் அதாவது அவனது மன்னறை விசாலமாக்கப்பட்டு ஒளி நிரப்பப்படும். சுவர்க்க வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அதன் நறுமணம் வீசிக்கொண்டு இருக்கும்.

thanks:facebook