அதிரை சேர்மன் மீது பதியப்பட்ட வழக்கு குறித்து சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

நமதூர் பெரூராட்சி தலைவர் ஹாஜி S.H.அஸ்லம் அவர்களுக்கு பேரூராட்சியில் பணிபுரியக்கூடிய துப்புரவு பணியாளர் ஒருவருக்கும் ஏற்ப்பட்ட தாவ சம்பந்தமாக பொதுமக்கள் பலர் கேட்டுக் கொண்டதற்க்கினங்க சங்க அவசர பொதுக்குழு ஆலோசனைக் கூட்டம் நடத்த இன்று தீர்மாணிக்கபட்டது. 

இதனை அடுத்து இன்று மாலை 5 மணிக்கு இந்த கூட்டம் கூட்டப்பட்டது.

 இதற்க்கு சம்சுல் இஸ்லாம் சங்கத்துக்கு உட்பட முஹல்லாவாசிகள் பலர் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை கூறினர். 

மேலும் இதில் அதிரை பேரூர் தலைவர் தன் மீது சுமத்தப்பட்ட மூன்றுமே அவதூறு வழக்குகள் என்று கூறினார்.

இந்த பிரச்சனை பிற்க்காலத்தில் நடக்காமல் இருக்க இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்த தீர்மானம் பின்வருமாறு

1.அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பாக இது குறித்து ஒரு கடிதம் எழுதப்படும்

2.இந்த கடிதத்தில் நிர்வாகிகள் கையெழுத்திட்டு கலெக்டர் போன்ற அதிகாரிகளிடம் ஒரு மனதாக மனு அளிக்கப்படும்.

Close