Adirai pirai
education and jobs உள்ளூர் செய்திகள்

அதிரையில் நடைபெற்ற அரசு பள்ளி மாணவிகளின் பேரிடர் குறைப்பு தின பேரணி (படங்கள் இணைப்பு)

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 13ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச பேரிடர் குறைப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று தஞ்சை மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் படி அதிரையில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வருவாய் துறை சார்பில் நடைபெற்றது.

திட்ட அலுவலர் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ, தாசில்தார், அதிரை கிராம நிர்வாக அலுவலர் அசாருத்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 300 மாணவிகள் கலந்துகொண்ட இந்த பேரணி அதிரையின் முக்கிய வீதிகள் வழியாக சென்று வெள்ளம், புயல் காலங்களில் தற்காத்துகொள்வது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.