அதிரையில் TIYA நடத்திய டெங்கு விழிப்புணர்வு பைக் பேரணி (படங்கள் இணைப்பு)

அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலில் பாதிக்கபட்டவர்கள் தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் உயிரிழிப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இது அதிராம்பட்டினம் பகுதியில் பொதுமக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனை கட்டுப்படுத்தும் வகையில் அதிரை TIYA சார்பாக இரண்டு முறை நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடத்தப்பட்டது. இதனை அடுத்து இன்று காலை 6 மணிக்கு 3வது கட்டமாக நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நடைபெற்றது.

இதை தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு டெங்கு ஒழிப்பை வலியுறுத்தி தாஜுல் இஸ்லாம் சங்கத்திலிருந்து பைக் பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு டெங்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Close