உம்ரா சென்றவரை வழியனுப்பி விட்டு திரும்பும்போது விபத்து… தாய் மகன் உட்பட 3 பேர் வஃபாத்..!

கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் நான்காவது தெருவை சார்ந்த உமன்தரகன் யூனுஸை மக்கா புனித பயணம் உம்ராவிற்கு சென்றார். அவரை திருவனந்தபுரத்தில் விமானநிலையத்திற்கு சென்று வழியனுப்பிவிட்டு கடையநல்லூர் திரும்பும் போது மங்களபுரத்தில் மஸ்தார் தர்ஹா அருகே விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் டிரைவர் பெயர் மணி ,40. குழந்தை அப்துல் ரஹீம் மகன் ராஷித், 10 காஜா மைதீன் மனைவி சைபுனிஸா, 38 ஆகியோர் உயிரிழந்தனர்.

டிரைவர் மணியில் உடல் கடையநல்லூர் அரசு மருத்துவ மனையில் உள்ளது. தென்காசி மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் பலியான சைபுன்னிசா,முகம்மது ரசித் ஆகியோர் உயிரிழந்தனர். இவர்களின் உடல் தென்காசி மாவட்ட மருத்துவமனையில் உள்ளது.

காயமடைந்த ரிகானா,முகம்மது, ஜம்லா,கயர்னிசா,பாத்திமா பீவீ,அப்துல் காதர்,அம்சத் ஆகியோர் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆபத்தான நிலையில் நெல்லை மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முகம்மது அஸ்பக்,முகம்மது பயாஸ்,சபீர் நிஸா,ஆகியோரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Close