Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரையில் சம்சுல் இஸ்லாம் சங்கம், சுற்றுசூழல் மன்றம் சார்பாக குப்பை கூண்டுகள் வைப்பு (படங்கள் இணைப்பு)

அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் சுற்று சூழல் மன்றம் இணைந்து அதிரையில் இரும்பு குப்பை கூண்டுகள் வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக சி.எம்.பி வாய்க்காலை ஒட்டியுள்ள சாலையில் இன்று முதல் கட்டமாக 4 குப்பை கூண்டுகளும், சிஎம்பி லேன் உள் பகுதியில் ஒரு குப்பை கூண்டும் வைக்கப்பட்டது. அதே போன்று இரண்டாம் கட்டமாக நாளை மற்றும் நாளை மறுதினம் அதிரை ஏஜே நகர், புதுத்தெரு, புதுமனைத்தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் 10 குப்பை கூண்டுகள் வைக்கப்பட உள்ளன.

இந்த நிகழ்வில் சம்சுல் இஸ்லாம் சங்க தலைவர் அபூபக்கர், செயலாளர் அப்துல் காதர், துணை தலைவர் முஹைதீன் மன்சூர், இணை செயலாளர் அப்துல் ரஹீம், பொருளாளர் செய்யது அஹமது கபீர், SISYA தலைவர் அஹமது அனஸ், செயலாளர் முஹம்மது சலீம், துணை தலைவர் மரைக்கா இத்ரீஸ், மற்றும் சுற்றுசூழல் மன்றம் 90.4, SISYA, SHISWA நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy