Adirai pirai
education and jobs உள்ளூர் செய்திகள்

அதிரை இமாம் ஷாபி பள்ளியில் அசத்திய இளம் விஞ்ஞானிகள் (வீடியோ, படங்கள் இணைப்பு)

[dropcap]மு[/dropcap]ன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் 86 வது பிறந்தநாளை முன்னிட்டு அதிரை இமாம் ஷாபி பள்ளியில் அறிவியல் கண்காட்சி மற்றும் மாணவர்களின் வாசிக்கும் திறனை மேம்படுத்தும் வகையில் புத்தக கண்காட்சியும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு திருமதி டி.வி.ரேவதி இயக்குனர், திருமதி மீனா குமாரி அவர்களும் தலைமை ஏற்றனர். பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் OKM.சிபகத்துல்லாஹ் அவர்களும், இணை செயலாளர் MF.முஹம்மது சலீம் அவர்களும் முன்னிலை வகித்தார்.

இந்த அறிவியல் கண்காட்சிக்கு காதிர் முஹைதீன் கல்லூரி பேராசிரியர்கள் Dr.பாரூக், ராஜா முஹம்மது, Dr.ஆயிஷா மரியம், ஆயிநயா ஆகியோர் சிறந்த படைப்புகளை தேர்ந்தெடுத்தனர்.

இதில் ஏராளமான பெற்றோர்கள் பார்வையாளர்கள் கலந்துகொண்டு மாணவர்களின் படைப்புகளை கண்டுகளித்ததுடன் மாணவர்களுக்கு ஊக்கமளித்தனர்.

வெற்றியாளர்கள் விபரம்:

6-8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள்:

முதல் பரிசு: முஹம்மது ஃபாயிஜ் (8ஆம் வகுப்பு)

இரண்டாம் பரிசு: அப்துல் காதர் & இஸ்மாயில் (7ஆம் வகுப்பு)

மூன்றாம் பரிசு: முஜ்ஜம்மில் (6ஆம் வகுப்பு)

6-8ஆம் வகுப்பு வரையிலான மாணவிகள்:

முதல் பரிசு:ஆஷிகா & சமீமா (8ஆம் வகுப்பு)

இரண்டாம் பரிசு: ஜுல்ஃபா (7ஆம் வகுப்பு)

மூன்றாம் பரிசு: அஸீலா (6ஆம் வகுப்பு)

9-10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள்:

முதல் பரிசு: ஜாபிர் & ஹனீஃப் (10 ஆம் வகுப்பு)

முஹம்மது இப்ராஹிம் & சஃபீக் அஹமது (10 ஆம் வகுப்பு)

அஜய் & சக்தி ஆனந்தம் (10 ஆம் வகுப்பு)

9-10ஆம் வகுப்பு வரையிலான மாணவிகள்:

முதல் பரிசு: ஷிஃபானா (10 ஆம் வகுப்பு)

இரண்டாம் பரிசு: நசீமா (9ஆம் வகுப்பு)

மூன்றாம் பரிசு: ரஸ்மீன் ஜுஹரா & முஹ்சீனா (9ஆம் வகுப்பு)

11-12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள்:

முதல் பரிசு:  அஹமது தஸ்லீம் (12 ஆம் வகுப்பு)

இரண்டாம் பரிசு: அஃப்சர் & ஃபாயிஜ் (11 ஆம் வகுப்பு)

மூன்றாம் பரிசு: ஆதிஃப் (11 ஆம் வகுப்பு)

11-12 ஆம் வகுப்பு வரையிலான மாணவிகள்:

முதல் பரிசு:  ஜுல்ஃபா (11 ஆம் வகுப்பு)

இரண்டாம் பரிசு: மாஹிரா & ஹவ்வா (11 ஆம் வகுப்பு)

மூன்றாம் பரிசு: ஃபாதிலா & ஜுல்ஃபிகா (11 ஆம் வகுப்பு)