Adiraipirai.in
posts

சவுதியில் பயங்கர தீ விபத்து 10 பேர் பலி; மூன்று பேர் படுகாயம்

சவுதியின பாதுகாப்பு இயக்குநர் சற்றுமுன் வெளியிட்டுள்ள தகவல் படி வடக்கு ரியாத் பகுதியில் ஒரு மர வேலைகள் நடைபெறும் தொழிற்சாலைகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது என்றும் இதில் 10 தொழிலாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் மூன்று பேர் படுகாயமடைந்தனர் என்று செய்தி வெளியிட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் பற்றி தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை மற்றும் இறந்த தொழிலாளிகள் எந்த நாட்டவர்கள் என்று தகவலும் உடனடியாக தெரியவில்லை.