அதிரை SISYA சார்பாக சம்சுல் இஸ்லாம் சங்க பழைய நிர்வாகிகள் வழியனுப்புதல், புதிய நிர்வாகிகள் வரவேற்றல் நிகழ்ச்சி!

அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் அண்மையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் தலைவராக அபூபக்கர், செயலாளராக அப்துல் காதர், துணை தலைவராக முஹைதீன் மன்சூர், இணை செயலாளராக அப்துல் ரஹீம், பொருளாளராக செய்யது அஹமது கபீர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து பழைய நிர்வாகிகளை வழியனுப்பும் வகையிலும் புதிய நிர்வாகிகளை வரவேற்க்கும் வகையிலும் சம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் SISYA சார்பாக சிறப்புக்கூட்டம் நடைபெற்றது.

இதில் பழைய நிர்வாகிகளை புதிய நிர்வாகிகள் சால்வை அணிவித்து வழியனுப்பி வைத்தனர். அதே போன்று புதிய நிர்வாகிகளை SISYA தலைவர் அஹமது அனஸ், செயலாளர் முஹம்மது சலீம், துணை தலைவர் மரைக்கா இத்ரீஸ், பொருளாளர் ஷேக் அலி ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். இதில் சம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் SISYA நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Close