அதிரையில் கடையின் பூட்டை உடைத்து பணம், பொருட்கள் கொள்ளை (படங்கள் இணைப்பு)

அதிரை மேலத்தெருவை சேர்ந்தவர் சாஹுல் ஹமீது. அல் – பாக்கியாத் பள்ளி அருகாமையில் K.E.யூசுப் மளிகை என்ற கடையை கடந்த 6 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். வழக்கம் போல நேற்றிரவு கடையை பூட்டிவிட்டி வீட்டிற்கு சென்ற சாகுல் ஹமீது இன்று காலை கடையை திறப்பதற்காக வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கடை திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடந்தார். இதனை அடுத்து அவர் கடைக்குள் சென்று பார்த்தபோது பணப்பெட்டியில் இருந்த ₹9,500 பணம் மற்றும் பூஸ்ட், ஹார்லிக்ஸ் உள்ளிட்ட கடையில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

இதுகுறித்து சாகுல் ஹமீது அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதிரையில் திருட்டு குற்றங்கள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடையே அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Close