Adirai pirai
உள்ளூர் செய்திகள்

FLASH NEWS: அதிரை காவல் நிலையம் முற்றுகை… தொடரும் பரபரப்பு!

அதிரையை சேர்ந்தவர்கள் வழக்கறிஞர் நிஜாம்(PFI முன்னாள் பட்டுக்கோட்டை ஜோனல் ப்ரசிடண்ட்), அன்வர் (அதிரை நகர் SDPI கட்சி முன்னாள் தலைவர்), சைஃபுத்தீன். இவர்களை இன்று இரவு எந்த காரணமும் கூறாமல் போலீசார் கைது செய்துள்ளதால் ஏராளமான பொதுமக்கள் காவல் நிலையம் முன்பாக திரண்டனர். இன்று காலை வரை கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனிடையே, அதிரை சூப்பர் ஸ்டூடியோ அருகே 14 வயது சிறுவனை காவல்துறையினர் லத்தியை துரத்திக்கொண்டு ஓடி, ஒரு கடையில் வைத்து அடித்துள்ளனர். இதனை தட்டிக்கேட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஜியாவுத்தீனையும் காவல் துறையினர் கண்ணத்தில் அறைந்ததில் அவருடைய கண்களில் காயம் ஏற்பட்டது. இந்த நிலையில் தன்னை தாக்கிய காவல்துறையினர் மீது புகார் அளிக்க இன்று காலை 11:30 மணியளவில் ஜியாவுத்தீன் காவல்நிலையம் சென்றார். ஆனால் அவருடைய புகாரை காவல்துறையினர் ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் அதிரை காவல்நிலையம் முன்பாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதனால் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy